வாழைப்பழம் கருகாமல் இருக்க, பூ வாடாமல் இருக்க..பெண்களுக்கு தேவையான சின்ன சின்ன வீட்டு உபயோக குறிப்புகள்..!

First Published Oct 2, 2022, 11:57 AM IST

Useful kitchen tips in Tamil: பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய வீட்டிற்கு தேவையான சின்ன சின்ன வீட்டு உபயோக குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டில் வாங்கி வைக்கும் பொருட்களை சீக்கிரம் கெட்டுப் போகாமல் எப்படி பராமரிப்பது என்பதைப் பற்றிய சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் பணமும் மிச்சம் ஆகும்.வாருங்கள் ஒவ்வொன்றாக தெரிந்து வைத்துக் கொள்வோம்.

இஞ்சி டீ பிரியரா நீங்கள்..? இனிமேல் இஞ்சியை நசுக்கி டீ போடாதீங்க. இஞ்சியை துருவி டீ போடுங்க. வாசம் தூக்கலா டீ கிடைக்கும்.

மேலும் படிக்க..Cholesterol: இயற்கை முறையில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் 8 உணவுகள்..மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்..
 

கோதுமை மாவை நன்றாக சலித்து விட்டு காற்று போகாத ஈரம் இல்லாத டப்பாவில் கொட்டி வைக்கும் முன்பு டப்பாவிற்கு அடியில் பத்து மிளகு போட வேண்டும். அப்படி செய்தால், கோதுமை மாவு சீக்கிரம் பூச்சி பிடிக்காமல்,கெட்டு  போகாமல் இருக்கும்.

மேலும் படிக்க..Cholesterol: இயற்கை முறையில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் 8 உணவுகள்..மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்..
 

உங்களுடைய துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பில் பூண்டு தோல் மற்றும் பூண்டு காம்புகளை காய வைத்து போட்டு வைக்கலாம். அப்படி, பூண்டு தோல் போட்டு வைத்தால் அந்த பருப்புகள் நீண்ட நாட்களுக்கு பூச்சி பிடிக்காமல் இருக்கும்.  

வாழைப்பழத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க இந்த வேக்ஸ் பேப்பரை பயன்படுத்தலாம். இதற்காக, வாழைப்பழத்தை மெழுகு காகிதத்தினால், சுற்றி அதனை முழுமையாக மூடி வைக்கலாம்.

வாழைப்பழம் அழுகாமல் பாதுகாக்க, அதனை தொங்கவிடும் வகையில் ஹேங்கர்களை சந்தையில் இருந்து வாங்கி, அதில் வாழைப்பழத்தை தொங்கவிடவும்

நீங்கள் பாத்திரம் துலக்கும் போது கால்களை கொசு கடித்துக் கொண்டே இருக்கும். அதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் கற்பூரத்தை நன்றாக நுணுக்கி போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி கரைத்து சிங்குக்கு அடியில் வைத்து விட்டால் இந்த வாசத்திற்கு,  எந்த விதமான பூச்சிகளும் வரவே வராது.


மேலும் படிக்க..Cholesterol: இயற்கை முறையில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் 8 உணவுகள்..மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்..
 

click me!