Bite poison:பூச்சி மற்றும் விஷ உயிரினங்கள் கடித்து விட்டால், விஷத்தை முறிப்பதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும்?

First Published Oct 2, 2022, 1:17 PM IST

எந்த விஷ கடிக்கும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய இயற்கை மருத்துவ முறைகளை பின்பற்றி  பாருங்கள் நிச்சயம் பலன் உண்டு. ஒருவேளை எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது

பூரான் கடிக்கு: 

மழைக்காலம் துவங்கி விட்டாலே, பூரான் தொல்லை அதிகமாக இருக்கும். குறிப்பாக, வயல் வெளியில் வேளை செய்யும் போது, பூரான், தேள் போன்றவை ஆதிக்கம் செலுத்தும். 

ஒருவேளை உங்களை பூரான் கடித்து விட்டால், உடனடியாக பயப்படாமல் சுண்ணாம்பு மஞ்சள், உப்பு ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து விட்டால்,  பூரான் விஷம்  உடனே இறங்கும்..

அதேபோன்று, தேள் கொட்டிவிட்டால், இரண்டு வெற்றிலை 6 மிளகு மென்று சாப்பிட உடன் விஷம் இறங்கும்.

தேன் குளவி கொட்டியதற்கு:

மரத்தில் தேன் குளவி கட்டி இருக்கும். ஒருவேளை உங்களை கொட்டி விட்டால், தேய்க்க கூடாது.ஏனெனில் அப்படி செய்தால் விஷம் இறங்கி வலி அதிகமாகும். அதற்கு பதிலாக கொடுக்கை எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும். 

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..மிதுனம், கன்னி ராசிக்கு தொழிலில் முன்னேற்றம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

 கம்பளி பூச்சி கடி:

மழைக்காலங்கள் அதிகமாக உலா வரும்,   கம்பளி பூச்சி கடித்து விட்டால், ரோமம் பட்ட இடத்தில் அரிப்பு வீக்கம் ஏற்படும். பதற்றம் இல்லாமல் உடனே நல்லெண்ணெய் தேய்த்து வர அரிப்பு குறையும்.

அப்படியும் வீக்கம் குறையவில்லை என்றால், கடித்த இடத்தில முருங்கை இலை சாறு தேய்க்கவும் அல்லது வெற்றிலை சாறு தேய்த்தால் குணமாகும்.

வண்டு கடித்து விட்டால்:

வண்டு பூச்சி கடித்த இடத்தில், பப்பாளி இலையை கசக்கி தேய்த்து வந்தால் உடனே குணமாகும்.  இல்லையென்றால், துளசி சாறு எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து தடவ குணமாகும்.இதனை 3 நாட்கள் வரை செய்ய வேண்டும். 

எறும்பு கடிக்கு:

எறும்பு கடித்தால், சில நேரம் நம்மால் தாங்கி கொள்ள முடியாது. அதேபோன்று, குழந்தைகளுக்கு எறும்பு கடித்தால் உடனே அழுக ஆரம்பிக்கும். பயப்பட வேண்டாம், எறும்பு கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்து வந்தால் குணமாகும்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..மிதுனம், கன்னி ராசிக்கு தொழிலில் முன்னேற்றம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

சிலந்தி பூச்சி கடித்து விட்டால்:

சிலந்தி பூச்சி கடித்த இடத்தில், ஆடாதோடை இலை 25 கிராம், பச்சை மஞ்சள்+ மிளகு இரண்டும் சேர்த்து 25 கிராம் அரைத்து கடித்த இடத்தில் தேய்த்தால் குணமாகும்.

அரணை கடித்தால்:

அரணை கடித்தால், பனை வெல்லம் 100 கிராம் சாப்பிட்டால் போதும் விஷம் முறியும்.

பெருச்சாளி கடித்து விட்டால்:

திப்பிலி, செஞ்சந்தனம் இரண்டையும் பொடித்துச் சலித்து சூரணத்தை பத்திப்படுத்திக் கொண்டு அதில் கால் டீஸ்பூன் அளவாகத் தேனில் குழைத்து ஒருநாள் இருவேளை வீதம் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் பெருச்சாளி கடி விஷம் குறையும்.

பூனை கடித்து விட்டால்:

நம்முடைய வீடுகளில் செல்ல பிராணியாக பூனை வளர்க்கப்படுகிறது. ஒருவேளை உங்களை பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும். 
 

எலி கடித்தால்:

எலி கடித்த ஒருவருக்கு, உடல் அரிப்பு இருக்கும் கண் சிவந்து காணப்படும். எனவே, இதுபோன்ற நேரத்தில் குப்பைமேனி இலையை நன்றாக அரைத்து எலி கடித்த இடத்தில் தினமும் காலையும் மாலையும் பூசி வந்தால், எலி கடி விஷம் இறங்கும்.

பாம்பு கடிக்கு:

 பொதுவாக கடித்த இடத்தில பாம்பின் பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.

 பாம்பானது நம்மை கடித்து விட்டால், கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள்.

பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து  மணிக்கு ஒரு தடவை கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது.பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. 

அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். நஞ்சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் உடனடியாக, அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும். அப்போது கசப்பு தெரிந்தால் நஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். 

பாம்பு கடித்த பிறகு இந்த முதலுதவி செய்த பின் பாரம்பரிய மருத்துவரை அணுகி விஷ முறிவு சிகிச்சை பெறுவது நல்லது.

குரங்கு கடித்தால் 

கோவில்கள், காடுகளில் குரங்குகள் அதிகமாக காணப்படும். இனிமேல் உங்களை குரங்கு கடித்து விட்டால் கொழுஞ்சி வேர் ,சுக்கு சம அளவு எடுத்து 5 கிராம் வீதம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..மிதுனம், கன்னி ராசிக்கு தொழிலில் முன்னேற்றம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

நாய் கடி

பெரும்பாலான வீடுகளில் செல்ல பிராணியாக நாய் வளர்க்கப்படுகிறது. தெரு நாய்கள் நடமாட்டமும் அதிகரித்து காணப்படுகிறது. சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம், வசம்பு 10 கிராம், முருங்கை ஈர்க்கு 10 கிராம் ஆகியவற்றை 500 மில்லி தண்ணீரில் போட்டு கஷாயம் செய்து குடித்து வந்தால் வாந்தி நின்று நாய் கடி விஷம் குறையும்.

மனித கடிக்கு:

 மனிதர்கள் இடையே கைகலப்பு, ஏற்படும் போடும் சில நேரம் கடித்து விடுவதுண்டு. குழந்தைகளிடம் இந்த கடி பழக்கம் அதிகமாக இருக்கும். இதனால், விஷம் ஏறும் வாய்ப்பும் உள்ளது. அப்படி கடிப்பட்டால், அவுரி வேர் 10 கிராம் நன்னாரி 10 கிராம் என சம அளவு எடுத்து அரைத்து கடிபட்ட இடத்தில் பூசி வர குணமாகும்.
 

click me!