Broken glass: கை தவறி கண்ணாடி உடைந்துவிட்டதா? இனி தரையில் 1 துகள் கூட மிஞ்சாது.. சுத்தம் செய்ய எளிய டிப்ஸ்!!

First Published | Apr 24, 2023, 7:30 PM IST

broken glass: உடைந்த கண்ணாடியை எளிதில் சுத்தம் செய்ய எளிமையான டிப்ஸ்.. வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே சுத்தம் செய்யலாம். 

உடைந்த கண்ணாடி துண்டுகளை கையால் எடுப்பது தவறான செயல். இதனால் கைகளில் காயம் ஏற்படலாம். கைகளால் சுத்தம் செய்யும்போது முழுவதுமாக அவற்றை அகற்ற முடியாமலும் போகலாம். மிகவும் நுண்ணிய கண்ணாடி துகள்களை எப்படி சுத்தம் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 

பிரெட் துண்டு! 

கண்ணாடி கீழே விழுந்து சுக்குநூறாக உடையும்போது பிரெட்டை வைத்து அதனை சுத்தம் செய்யலாம். இதனால் கண்ணுக்கு புலப்படாத நுண்ணிய கண்ணாடித்துகள் கூட சுத்தமாகிவிடும். 

உருளைக்கிழங்கு 

அவித்த உருளைக்கிழங்கை கொண்டு உடைந்த கண்ணாடி துகள்களை சுத்தமாக எடுத்து விடலாம். வேக வைத்த உருளைக்கிழங்கை கண்ணாடி உடைந்த இடத்தில் வைக்கும் போது அவை அதில் ஒட்டிக் கொள்ளும். இதன் மூலம் எளிதாக அவற்றை நீக்கிவிடலாம். 

Tap to resize

வாழைப்பழத் தோல் 

வாழைப்பழத்தின் தோலை வைத்து உடைந்த கண்ணாடி துகள்களை கைகளால் தொடாமல் எளிதில் சுத்தம் செய்து விடலாம். 

சப்பாத்தி மாவு 

பிசைந்த சப்பாத்தி மாவை கொண்டு உடைந்த கண்ணாடி துகள்களை ஒன்று கூட மிச்சம் இல்லாமல் சுத்தமாக துடைத்து எடுக்கலாம். கண்ணாடி உடைந்த இடத்தில் சப்பாத்தி மாவை ஒத்தி எடுப்பதன் மூலம் அந்த இடம் சுத்தமாகிவிடும். 

இதையும் படிங்க: கோடையில் நீர்ச்சத்து குறைபாடு எவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்தும் தெரியுமா? சிறுநீரக கற்கள் முதல் பெரிய லிஸ்ட்!!

வேக்கம் கிளீனர் (vacuum cleaner) 

உங்களுடைய வீட்டில் வேக்கம் கிளீனர் (vacuum cleaner) இருந்தால் அதை வைத்து சுத்தமாக கண்ணாடி துகள்களை நீக்கிவிடலாம். ஆனால் கண்ணாடி துகள்களை சுத்தப்படுத்திய பிறகு வேக்கம் கிளீனரையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். 

கண்ணாடி உடைந்ததும் முதலில் வீட்டில் உள்ள துடைப்பத்தை கொண்டு அதனை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு எஞ்சி கீழே கிடக்கும் கண்ணாடி துகள்களை மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களைக் கொண்டு எளிதில் நீக்கலாம். 

இதையும் படிங்க: சுக்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! இஞ்சியை விடவும் இதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Latest Videos

click me!