தென்னிந்தியாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழும் நயன்தாரா அண்மையில் தன் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார். அவருடைய சம்பளம் ஒவ்வொரு திரைப்படத்தின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி அதிகரிக்கும். சுமார் 5 முதல் 10 கோடி ரூபாய் வரைக்கும் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. தென்னிந்திய நடிகைகளிலேயே தனியார் ஜெட் விமானம் வைத்திருப்பவரும் இவர்தான். இப்போது அவருடைய சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. ஆடம்பரனான அவரது சொத்துவிவரங்களை இங்கு காணலாம்.
நடிகை நயன்தாரா, வேலை நிமித்தம் அடிக்கடி பயணம் மேற்கொள்ள இருப்பதால் சொந்தமாக ஜெட் விமானம் வாங்கி பயன்படுத்தி வருகிறார். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து கொச்சின், ஹைதராபாத், மும்பை ஆகிய பயணங்களுக்கு அந்த விமானத்தை பயன்படுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன.
நடிகை நயன்தாரா சில சொகுசு கார்களை பயன்படுத்தி வருகிறார். இவரிடம் பிம்.எம்.டபிள்யூ 5எஸ் (BMW 5s) சீரிஸ் உள்ளது. ஒரு மெர்சிடஸ் ஜி.எல்.எஸ் 350டி (Mercedes GLS 350 D), ஃபோர்டு எண்டெவர், பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 series), இன்னோவா கிரிஸ்ட்டா ஆகியவை உள்ளன. அவரின் கார்களின் மதிப்பு 5 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.
தனக்கு படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நயன்தாரா கணவன், இரண்டு மகன்களுடன் வீட்டிலேயே நேரத்தை செலவிடுவதில் கவனம் செலுத்துகிறார். இவருக்கு சென்னையில் நல்ல வசதியான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு மட்டுமில்லை, கேரளா, ஹைதராபாத், மும்பையில் சில வீடுகளை வைத்திருக்கிறார். அபார்ட்மெண்ட் தவிர்த்து, நடிகை நயன்தாராவிற்கு சென்னையில் ஒரு தனி வீடும் இருக்கிறது. வீடு மட்டுமில்லை, கார்களும் விதவிதமாக வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: அட்சய திருதியை ஏப்ரல் 22ஆம் தேதியா? 23ஆம் தேதியா? எந்த நாளில் தங்கம் வாங்க வேண்டும்!!
நயன்தாராவுக்கு சொந்தமாக ஸ்கின்கேர் நிறுவனமும் உள்ளது. இதை தன் நண்பருடன் பார்ட்னர்ஷிப்பில் தொடங்கினாராம். இந்த லிப் பாம் நிறுவனம் 2021ஆம் ஆண்டில் தொடங்கியது. கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட லிப் பாம் வகைகளைக் கொண்ட முதல் பெரிய பிராண்ட் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒரு பிரபல தேநீர் விற்பனை நிறுவனத்தின் ஒரு பகுதியையும் நயன்தாரா வைத்திருப்பதாக கூறப்படுகிறது.