தினந்தோறும் ஒரே ஒரு 'வெற்றிலை' ஆண்களோட முக்கிய பிரச்சனைக்கு தீர்வு.. எப்போது சாப்பிடனும் தெரியுமா? 

First Published | Nov 28, 2024, 12:34 PM IST

Betel Leaves Health Benefits : வெற்றிலை சாப்பிடுபவர்களுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதை எப்போது, எவ்வளவு சாப்பிட வேண்டும் என இங்கு காணலாம்.  

Betel Leaves Health Benefits In Tamil

Betel Leaves Benefits : வெற்றிலைக்கும் இந்திய பாரம்பரியத்திற்கும் தொடர்பு உள்ளது. வெற்றிலை இல்லாத சுப நிகழ்ச்சிகளே கிடையாது. எந்த பூஜை, விழாவாக இருந்தாலும் வெற்றிலை அங்கு இருக்கும். தாம்பூலத்தில் வெற்றிலை வைத்து சுபமாக கருதப்படுகிறது. ஆயுர்வேதம் வெற்றிலையை பல வழிகளில் பயன்படுத்த அறிவுறுத்துகிறது. சாமி பிரசாதம் கூட வெற்றிலையில் தரப்படுகிறது.  வெற்றிலையில் உள்ள சத்துக்கள் உடலுக்கு அவசியமானவை வெற்றிலையில் தயாரிக்கும் எளிய மருந்துகள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. 

Betel Leaves Health Benefits In Tamil

Betel Leaves Benefits : வெற்றிலையின் மகத்துவம்: 

உயிரியல் தொழில்நுட்ப தகவல்களுக்கான தேசிய மையம் (NCBI) அண்மையில் வெளியிட்ட ஆய்வுகளின் தரவுகளை பார்க்கும்போது  வெற்றிலையின் பண்புகள் ஆதாரப்பூர்வமாக தெரிகின்றன. இதில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளதால் கிருமிகளை எதிர்த்து போராட உதவும். ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் வெற்றிலையில் உள்ளன. வெற்றிலையை எப்போது உண்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை இங்கு காணலாம். இரவில் நீங்கள் வெற்றிலை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகளை அடைய முடியும்.

இதையும் படிங்க:  உங்கள் கூந்தல் கட்டுக்கடங்காமல் வளர இந்த ஒரு இலையில் ஹேர் மாஸ்க் போடுங்க..

Tap to resize

Betel Leaves Health Benefits In Tamil

Benefits Of Eating Betel Leaf At Night : இரவில் வெற்றிலை உண்பதால் நன்மைகள்: 

வெற்றிலையை பகலில் உண்பதை விட இரவில் உண்பது அதிகப்படியான நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. மழைக்காலங்களில் வெற்றிலைகள் செழித்து வளரும். இவற்றின் பசுமையான இலைகளை இரவில் உண்பதால் வாய்வழி ஆரோக்கியம் மேம்படுகிறது.

வாய்வழி சுகாதாரம்:  

வெற்றிலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் காணப்படும் தீங்கு செய்யும் பாக்டீரியா, பூஞ்சைகளை நீக்க உதவுகிறது. வாயில் உள்ள துர்நாற்றத்தை குறைக்க வெற்றிலை உதவுகின்றன.  ஏற்கனவே, வாயில் புண்கள் இருப்பவர்கள் வெற்றிலை உண்பதால் அவை விரைவில் குணமாகும். இது தவிர நாக்கில் ஏதேனும் காயம், எரிச்சல் ஆகியவை இருந்தாலும் வெற்றிலை உண்பது நல்ல பலனைத் தரும். வாயில் ஏதேனும் புண்கள் இருந்தால்  வெற்றிலையை சாப்பிடும் போது சுண்ணாம்பு மிகக் குறைவாக பயன்படுத்த வேண்டும். தினமும் வெற்றிலைகளை மெல்வதால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். 

Betel Leaves Health Benefits In Tamil

Benefits Of Eating Betel Leaf  : வயிறு பிரச்சனைகளுக்கு தீர்வு! 

வெற்றிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. அசிடிட்டி, நெஞ்செரிச்சல் ஆகிய பிரச்சனைகளை வெற்றிலை குறைக்கும்.  உடலில் தேங்கும் நச்சுக்களை நீக்க வெற்றிலை உதவுகிறது. இதனை நல்ல நச்சு நீக்கி என்றே சொல்லலாம்.  

செரிமானம் மேம்படும்! 

குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வெற்றிலை ஊக்குவிக்கும். இதனால் செரிமானம் மேம்படும். வாயு தொல்லை, அமிலத்தன்மை, வயிறு வீக்கம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் வெற்றிலை உண்பதால் பலன் கிடைக்கும். 

Betel Leaves Health Benefits In Tamil

Benefits Of Eating Betel Leaf : நரம்பு மண்டல ஆரோக்கியம்: 

நரம்பு மண்டலத்தை நன்றாக செயல்பட வைக்க வெற்றிலை உதவுகிறது. நரம்பியல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் பண்புகளை வெற்றிலை கொண்டிருப்பதால் உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும். 

இனப்பெருக்க மண்டலம்: 

ஆண்களுடைய இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வெற்றிலை உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம் போன்றவற்றை வெற்றிலை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. முன்கூட்டிய விந்துவெளியேற்ற பிரச்சனைக்கும் வெற்றிலை தீர்வளிக்கும்.  

Betel Leaves Health Benefits In Tamil

Benefits Of Eating Betel Leaf : இளமையான தோற்றம்: 

வயதான தோற்றத்தை தாமதமாக்கும் பண்புகள் வெற்றிலையில் உள்ளன. வெற்றிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நமது உடலில் செல்களை சேதமாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும். இதனால் வயதாகும் செயல்பாடு தாமதமாகிறது. இதனால் உங்களுடைத சருமம் இளமையாக தோற்றமளிக்கும். சருமம் ரொம்ப காலம் ஆரோக்கியமாக இருக்க வெற்றிலை உதவும்.

இதையும் படிங்க:  Betel Leaf : வெற்றிலை புற்றுநோய் வராமல் தடுக்குமா..? உண்மையை ஆராயலாம் வாங்க!

Latest Videos

click me!