தவறான வளர்ப்பு முறையால் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் 'இப்படி' 1 நோய் வருமாம் தெரியுமா?

First Published | Nov 28, 2024, 11:21 AM IST

Parenting Mistakes : பெற்றோர்களே உங்கள் குழந்தை மனதளவில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் குழந்தை வளர்ப்பு முறையில் சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும் அது என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

Child mental health and parenting in tamil

Common Parenting Mistakes To Avoid : குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது பெற்றோரின் கடமை. எனவே அவர்களை நல்ல முறையில் வளர்க்கும் போது எதிர்காலத்தில் அவர்கள் நன்றாக இருப்பார்கள். அதுவே அவர்கள் வளர்ப்பு முறை தவறாக இருந்தால் அவர்களது எதிர்காலத்தை மோசமாக பாதிக்கப்படும்.

Child mental health and parenting in tamil

Common Parenting Mistakes To Avoid  :அந்த வகையில் பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடிவதில்லை. இதுதவிர கடுமையான ஒழுக்கம் மற்றும் கண்டிப்புடன் தங்கள் குழந்தை பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் இது தவறு.

பெற்றோர்களின் இந்த வளர்ப்பு முறையால் குழந்தைகள் மனரீதியாக மிகவும் பலவீனம் அடைகிறார்கள். சில சமயங்களில் குழந்தைகள் வளரும் போது மனநல தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதன் விளைவாக அவர்கள் எதிர்காலத்தில் மனநோயாளியாக மாறிவிடுகிறார்கள். எனவே இந்த பிரச்சனையை தவிர்க்க குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் என்ன மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Videos


Child mental health and parenting in tamil

Common Parenting Mistakes To Avoid: குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யக்கூடாத தவறுகள்:

உணர்வுகளை புறக்கணிப்பது:

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அடிப்படை தேவைகளான உணவு மற்றும் அவர்கள் விரும்பும் விஷயங்களை பூர்த்தி செய்கிறார்கள், ஆனால் அவர்களது உணர்ச்சிகளை புறக்கணிக்கிறார்கள். குழந்தைகளின் உணர்வுகளை பெற்றோர்கள் புரிந்து கொள்ளாவிட்டால் அவர்கள் பயனற்றவர்களாக உணர்வார்கள். இதன் விளைவாக அவர்களுக்கு பதட்டம் அதிகரிக்கும் மற்றும் குறைந்த சுயமரியாதை இருக்கும். இது தவிர அவர்கள் நண்பர்களை உருவாக்குவதில் சிரமப்படுவார்கள்.

Child mental health and parenting in tamil

Parent-child relationship and mental health : கடுமையான தண்டனை வழங்குதல்:

குழந்தைகள் தவறு செய்தால் பெற்றோர்கள் அவர்களை கண்மூடித்தனமாக காயப்படுத்துகிறார்கள். சொல்லப் போனால் அவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குகிறார்கள். இதன் விளைவாக குழந்தைக்கு பெற்றோர் மீது பயம் இருக்குமே தவிர மதிப்பு இருக்காது மேலும் அவர்கள் எப்போதுமே அமைதியற்றவர்களாகவும், பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்வார்கள்.

இதையும் படிங்க:  குழந்தைகள் தூங்க தனி அறை அவசியமா? எந்த வயதில் அப்படி செய்யலாம்?

Child mental health and parenting in tamil

Child mental health and parenting : பொறுப்பில்லாமல் இருப்பது:

சிலர் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாமல் குடும்பத்தினருக்காக குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு குழந்தை வளர்ப்பில் ஈடுபாடு ரொம்பவே குறைவாக இருக்கும். இப்படி வளரும் குழந்தை புறக்கணிக்கப்படுவதாக உணரும். மேலும் தன்னை ஆதரிக்க யாரும் இல்லை என்று ஏங்கும்.

Child mental health and parenting in tamil

Parenting style and mental health : பெற்றோரின் கனவு

சில பெற்றோர் தங்களால் அடைய முடியாத கனவை தங்களது குழந்தைகள் மூலம் அறிய நினைக்கிறார்கள். மேலும் தங்களது கனவு நிறைவேற்ற குழந்தை மீது அழுத்தம் கொடுக்கிறார்கள். இதனால் குழந்தைகள் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். 

இதையும் படிங்க:  உங்கள் குழந்தை சரியான விஷயங்களை பேச உதவும் '5' வழிகள்!!

Child mental health and parenting in tamil

Parenting style and mental health : குழந்தைகளின் ஆளுமையை புறக்கணிப்பது:

பெற்றோர்கள் சிலர் தங்கள் குழந்தைகளின் வெற்றி அனைத்திற்கும் தான் என்று நினைக்கிறார்கள். மேலும் தங்களது சொந்த பெருமைக்காக குழந்தை மீது அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள்.  குழந்தை சாதித்தால் அவர்கள் சாதனையை பாராட்டுகிறார்களே தவிர, அவர்களது ஆளுமையை அல்ல. இதனால் குழந்தைக்கு மன அழுத்தம ஏற்படும்.

click me!