
குழந்தைகளை தூங்க வைப்பது பெற்றோர்களுக்கு சவாலான காரியங்களில் ஒன்றாகும். மேலும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர நல்ல தூக்கம் அவர்களுக்கு மிகவும் அவசியம். இல்லையெனில், அது அவர்களின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். இது தவிர, பல்வேறு உடல்நல பிரச்சனைகளையும் அவர்கள் சந்திக்க நேரிடும்.
குழந்தைகள் சரியாக தூங்காமல் இருப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். ஆனால் இந்த பிரச்சனையை உணவு பழக்கத்தின் மூலம் சுலபமாக சரி செய்து விடலாம் தெரியுமா?
ஆம், குழந்தைகள் நல்ல தூக்கத்தை பெற அவர்கள் உண்ணும் உணவு சரியாக இருக்க. இதற்கு குழந்தைகளின் உணவு பழக்கத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அவர்கள் இரவில் நன்றாக தூங்குவார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
எனவே, குழந்தைகள் இரவில் நன்றாக தூங்க எந்த மாதிரியான உணவுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: குள்ளமாக இருக்கும் குழந்தைகள்.. சீக்கிரமே 'உயரமாக' வளர உதவும் '5' சூப்பர் உணவுகள்!!
குழந்தைகளின் நல்ல தூக்கத்திற்கு இரவில் கொடுக்க வேண்டிய உணவுகள்:
வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் நல்ல அளவு மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளதால், அவை தசைகளை தளர்த்துவதற்கும், உடலை சுத்தப்படுத்தவும் மற்றும் தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது தவிர மலச்சிக்கல் பிரச்சனையும் தடுக்கும். எனவே குழந்தைகளுக்கு இரவு தூங்கும் முன் வாழைப்பழம் கொடுங்கள்.
பால் பொருட்கள்:
பால் தயிர்ச்சி போன்ற பால் பொருட்களில் கால்சியம் மற்றும் டிரிப்டோபான் உள்ளது. இது செரோடோனின் உற்பத்தி செய்யும் அமினோ அமிலம். இது தூக்கத்தின் அதிர்வெண்ணை கட்டுப்படுத்தும். எனவே குழந்தைகளில் உணவில் பால் பொருட்களை சேர்த்தால் அவர்களுக்கு இரவு நல்ல தூக்கம் வரும்.
தானிய வகைகள்:
குழந்தைகளின் உணவில் தானிய வகைகளை சேர்த்தால் அவர்களுக்கு முழு உணர்வை ஏற்படுத்தும். இதன் காரணம் இதில் அதிக அளவு புரதம் மற்றும் டிரிப்டோபான் உள்ளது. இது அவர்களின் நல்ல தூக்கத்திற்கு சிறந்த உணவாகும்.
செர்ரிகள்
செர்ரிகள் குழந்தைகளின் சிறந்த தூக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இது சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். எனவே குழந்தைகளின் இரவு உணவில் இதை சேர்த்துக் கொள்ளலாம்.
பாதாம்
பொதுவாக பாதாம் குழந்தைகளுக்கு காலையில் தான் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் இரவில் கூட கொடுக்கலாம். பாதாம் குழந்தையின் சிறந்த தூக்கத்திற்கு பங்களிக்கிறது. வேண்டுமானால், குழந்தை தூங்க செல்வதற்கு முன் இரவு பாதாம் பால் கொடுக்கலாம். ஏனெனில் பாதாம் பாலில் அதிகளவு மெலடோனின் உள்ளதால், அது அவர்களின் தூக்கத்தின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
இதையும் படிங்க: நாள்தோறும் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால் 'இத்தனை' நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?