Effective Wall Cleaning Tips In Tamil
வீட்டின் சுவர் வீட்டிற்கு அழகான தோற்றத்தை கொடுக்கும். ஒருவேளை வீட்டின் சுவற்றில் கறை ஏதேனும் இருந்தால் அது மொத்த வீட்டில் தோட்டத்தையும் கெடுத்து விடும். உண்மையில் சில சமயங்களில் குழந்தைகள் வீட்டின் சுவற்றை அழுக்காக்கி விடுகிறார்கள் இதனால் சுவற்றில் ஆங்காங்கே கரைகள் தோன்றும்.
Effective Wall Cleaning Tips In Tamil
வீட்டின் சுவற்றில் இருக்கும் எண்ணெய் கறையை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி?
ப்ளீச்சிங் பவுடர்
இது கறையை அகற்ற பெரிதும் உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வீட்டின் சுவற்றில் இருக்கும் எண்ணெய் கறையை அகற்றவும் இதை பயன்படுத்தலாம். இதற்கு ஒரு கிண்ணத்தில் அரை ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். அந்த பேஸ்ட்டை கறை உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தேவையில்லாத டூத் பிரஸ் கொண்டு மெதுவாக தேய்க்கவும். பிறகு ஈரமான துணியால் துடைக்க வேண்டும். பின் சூடான நீரால் துடைக்கவும். இப்போது பார்த்தால் எண்ணெய் கறை நீங்கி இருக்கும்.
Effective Wall Cleaning Tips In Tamil
எலுமிச்சை சாறு & ஷாம்பூ
இதற்கு ஒரு கிண்ணத்தில் அரை ஸ்பூன் ஷாம்பு மற்றும் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தண்ணீரும் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு ஒரு துணியை இதில் நனைத்து, அதை கறஜ் உள்ள இடத்தில் மெதுவாக தேய்க்க வேண்டும். 5 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு ஈரமான துணியை கொண்டு துடைக்க வேண்டும். ஷாம்பூ எண்ணெய் கரையை எளிதில் அகற்றி விடும்.
இதையும் படிங்க: மிதியடியை துவைப்பது இவ்வளவு ஈஸியா? சூப்பர் டிப்ஸ்!!
Effective Wall Cleaning Tips In Tamil
வினிகர்
சுவற்றில் இருக்கும் எண்ணெய் கரையை நீக்க வினிகர் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் வினிகர் மற்றும் தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து அதை எண்ணெய் கறை மீது தெளித்து சுமார் 10 நிமிடம் கழித்து ஒரு ஈரமான துணியால் துடைக்கவும். இப்போது பார்த்தால் கறை முற்றிலும் மறைந்திருக்கும்.
சமையல் சோடா
சுவற்றில் இருக்கும் எண்ணெய் கறையை போக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம் .பேக்கிங் சோடா விடாப்படியான எண்ணெய் கறையை கூட மிக எளிதாக அகற்றி விடும். இதற்கு சிறிதளவு பேக்கிங் சோடாவில் தண்ணீர் கலந்து அந்த பேஸ்டை கறை படிந்த இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து ஒரு துணியால் நன்றாக துடைக்கவும். இப்போது கறை முற்றிலும் நீங்கி இருக்கும். இதை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன் கையுறைகள் மற்றும் முகமூடி அணிய மறக்காதீர்கள்.