eating rules: தினமும் சம்மணம் போட்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

First Published | Mar 18, 2023, 7:45 AM IST

சம்மணம் போட்டு சாப்பிட்டால் அதனால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக உடல் எடையை குறைப்பதில் கூட நல்ல பலன் தரும்.

கடந்த காலங்களில் அனைவரும் தரையில் சம்மணம் இட்டு சாப்பிட்டார்கள். ஆனால் அது அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை தான்.. இப்போதெல்லாம் டைனிங் டேபிள், நாற்காலி என வசதிக்கேற்றபடி மக்கள் சாப்பிடும் நிலைகளை மாற்றி கொண்டனர். இப்படி சம்மணம் போடாமல் உயரத்தில் அமர்ந்து காலை தொங்க விட்டு சாப்பிடுவது நல்லதல்ல. இதனால் உடல்நல பிரச்சனைகள் வருவதாக முன்னோர் கூறியுள்ளனர். 

சம்மணம் போட்டு சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் என்பது தெரிந்தால் இனி தவிர்க்காமல் செய்வீர்கள். நீங்கள் சம்மணம் போடாமல் காலை தொங்கவிட்டபடி உண்பதால் உடலில் ரத்த ஓட்டம் இடுப்புக்கு கீழ்ப்பகுதியில் மட்டும் தான் அதிகம் இருக்குமாம். ஆனால் தரையில் அமர்ந்து காலை மடக்கி சம்மணம் போட்டு அமர்ந்து உண்ணும் போது ரத்த ஓட்டம் உடல் முழுக்க சீராக பாயும். 

Tap to resize

 உண்ணும்போது ரத்த ஓட்டம் சீராக இருப்பது தான் எளிய ஜீரணத்திற்கு உதவும் என கூறப்படுகிறது. அதனால் உணவு உண்ணும்போது கீழே அமர்ந்து காலை மடக்கி சம்மணம் போட்டு தான் சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான உடல் நிலை கொண்டிருப்பவர்கள் தரையில் சம்மணம் போட்டு சாப்பிடுவது நல்லது. மூட்டு வலி உள்ளவர்கள் தவிர்க்கலாம். 

சம்மணம் போட்டு தரையில் அமர்ந்து உண்ணும்போது கவனம் சாப்பாட்டு மேல் மட்டும் தான் இருக்கும். இதனால் அளவாக சாப்பிட முடியும். 

இதையும் படிங்க: தினம்ச 1 நுங்கு சாப்பிட்டால் கூட.. உடலில் இவ்வளவு பிரச்சனைகளை சரி செய்துவிடும் தெரியுமா?

தரையில் சம்மணம் போட்டு உட்காந்தால் முதுகுத்தண்டு வலுவடையும். இடுப்பு வலியில் இருப்பவர்கள் இந்த விஷயத்தை செய்து பாருங்கள். கட்டில், சோபாவில் கூட சம்மணம் போட்ட நிலையில் அமரலாம். பத்மாசனம் செய்வது போல சம்மணம் போடுவது பலன்களை கொடுக்கும். 

இதையும் படிங்க: வீட்டில் எலி தொல்லையா? இந்த 1 பொருளை மட்டும் வைத்தால்... உங்க வீட்டு பக்கம் எட்டி கூட பார்க்காது

Latest Videos

click me!