
காய்கறிகள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நாம் அனைவரும் அறிந்ததே. இன்னும் சொன்னால் ஊட்டச்சத்துக்களின் கூதிகள் எதுவென்றால் அது காய்கறிகள் தான். அவை நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த பெரிதும் உதவுகின்றது. ஒவ்வொரு காய்கறிகளையும் சமைத்து சாப்பிடும் விதம் ஒவ்வொரு விதமானது என்றாலும், அவற்றை சமைத்து சாப்பிடுவதற்கான சரியான வழியை அறிந்து கொள்வது இன்னும் முக்கியமானது.
ஏனெனில், சில சமயங்களில் நாம் தெரிந்தோ தெரியாமலோ சில காய்கறிகளை தவறான வழியில் சமைத்து சாப்பிடுகிறோம். இதனால் அவற்றில் இருக்கும் முழு பலனையும் நம்மால் பெற முடியாமல் போகிறது. நாம் சில காய்கறிகளை தோல் உரிக்காமல் அப்படியே சமைத்து சாப்பிட வேண்டும். இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ஏனெனில் அந்த காய்கறிகளில் இருக்கும் முழு ஊட்டச்சத்துகளுக்கும் கிடைக்க வேண்டுமெனில், அவற்றை தோலுரிக்காமல் தான் சமைக்க வேண்டும். அப்படி எந்த காய்கறிகளை தோலுரிக்காமல் சமைத்து சாப்பிட வேண்டும், அதனால் உங்களது ஆரோக்கியம் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் பிரிட்ஜில் வைத்த காய்கறி சீக்கிரமே அழுகி போகுதா? 'இந்த' டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!
உருளைக்கிழங்கு:
நீங்கள் உருளைக்கிழங்கை சமைக்கும் போது அதை தோலுரித்து தான் சமைத்து சாப்பிடுகிறீர்கள் என்றால், இன்றே பழக்கத்தை நிறுத்தி விடுங்கள். ஏனெனில் உருளைக்கிழங்கின் தோளில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி அதன் தோலில் இரும்புச்சத்தும் அதிகமாகவே உள்ளது. இது தவிர உருளைக்கிழங்கு தோளில் இருக்கும் பொட்டாசியம் உங்களது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவிகின்றது. எனவே நீங்கள் இனி உருளைக்கிழங்கை சாப்பிடும்போது அவற்றின் தோலை நீக்காமல் நன்கு கழுவி சமைத்து சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: ஒருபோதும் பச்சையாக சாப்பிடக்கூடாத காய்கறிகள் இவை தான்! ஏன் தெரியுமா?
வெள்ளரிக்காய்:
நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பொதுவாக வெள்ளரிக்காய் சாலட்டாக தான் பலர் எடுத்துக் கொள்கிறார்கள். வெள்ளரிக்காயில் இருக்கும் முழு ஊட்டச்சத்துக்களையும் நீங்கள் பெற விரும்பினால், அதை தோலுரிக்காமல் அப்படியே தான் சாப்பிட வேண்டும். ஏனெனில் வெள்ளரிக்காய் தோலில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன.
கேரட்:
கேரட்டை ஒருபோதும் தோலுரித்து சாப்பிட வேண்டாம். ஏனெனில் அதன் தோலில் ஏராளமான ஆக்சிஜனேற்றிகள், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, வைட்டமின் பி3 போன்றவை உள்ளன. கேரட்டை நீங்கள் எப்படி சாப்பிட்டாலும் அதன் தோலை நீக்க வேண்டாம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இனிப்பு உருளைக்கிழங்கு:
இனிப்பு உருளைக்கிழங்கின் தோலில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகமாகவே உள்ளன. அவை அனைத்தும் உடலுக்கு பலவிதமான நன்மைகளை வாரி வழங்குகிறது. எனவே, இனிப்பு உருளைக்கிழங்கை நீங்கள் சாப்பிட்டால் இனி அவற்றின் தோலை நீக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்.
பூசணிக்காய்:
பூசணி தோலில் இரும்பு வைட்டமின் ஏ, பொட்டாசியம் போன்றவை அதிக அளவில் உள்ளன. அவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பூசணி தோல் சற்று தடிமனாக இருப்பதால் சமைக்க அதிக நேரம் எடுக்கும் என்று பல இதை வாங்குவதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் பூசணிக்காயை நீங்கள் கொதிக்க வைத்து பயன்படுத்தினால் அதன் தோல் மென்மையாகிவிடும்.