மாட்டுப் பொங்கல் என்பது தமிழர்களின் திருநாளான தை பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலானது கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக தான் கொண்டாடப்படுகின்றது. மாடுகள் தான் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாட்டு சாணம் தான் விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்தப்பட்டுகிறது. அப்படி பயன்படுத்தப்பட்ட உரத்தில் வளர்ந்த நெல்லை அறுவடை செய்து, அதை போரடிக்கவும், பின் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கவும் மாடுகள் தான் பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே விவசாயத்தின் ஒவ்வொரு விஷயத்திற்கும் மாடுகள் உதவுவதால் அவற்றுக்கு நன்றி செலுத்தும் உதவாததால் பழங்காலத்தில் இருந்து மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
24
Mattu Pongal 2025 in Tamil
மாட்டுப் பொங்கல் அன்று மாடுகள் இருக்கும் தொழுவத்தை நன்கு சுத்தம் செய்து பிறகு மாடுகளையும் குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளுக்கு வண்ணங்கள் பூசி மாடுகளை அலங்கரிப்பது வழக்கம். மேலும் மாடுகளுக்கு கழுத்தில் சலங்கையும் கட்டுவார்கள்.இது தவிர புதிய மூக்காண்கயிறு, தாம்பு கயிறு போன்றவே மாடுகளுக்கு அணிவிப்பார்கள். இதனுடன் விவசாயத்திற்கு உதவிய கருவிகளையும் சுத்தம் செய்து அதில் சந்தன குங்குமம் வைப்பார்கள். மாட்டை அலங்கரித்த பிறகு மாட்டு தொழுவத்தில் வைத்து பொங்கல் வைத்து, மாட்டிற்கு தீபம் காட்டி வழிபட்டு இப்படியாக மாட்டுப் பொங்கலை கொண்டாடி மகிழ்வார்கள்.
34
Mattu Pongal 2025 in Tamil
மாட்டுப் பொங்கல் அன்றுதான் தமிழ்நாட்டின் வீர விளையாடான ஜல்லிக்கட்டு நடைபெறும். தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களில் இது போன்ற வீர விளையாட்டுகளை நடத்தி உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்த வீர விளையாட்டில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்வார்கள்.
மாட்டுப் பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரமானது காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை அதுபோல மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை ஆகும் இந்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யலாம்.