பொதுவாக வெங்காயத்தை நாம் சமையலுக்கு தான் அதிகமாக பயன்படுத்துவோம். இது உணவுக்கு சுவையை தருவது மட்டுமின்றி ,பல அருகே நன்மைகளையும் நமக்கு வழங்குகிறது. அதுமட்டுமின்றி அதன் சாற்றை தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்துவோம். ஆனால், அதை நீங்கள் எப்போதாவது குடித்திருக்கிறீர்களா? வெங்காயத்தில் அலர்ஜி எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு, புற்று நோய் எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இது தவிர இதில் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், பைட்டமின் ஏ சி மற்றும் ஈ போன்றவை போதுமான அளவில் உள்ளன. இவை தொற்று நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. இப்போது வெங்காய சாற்றை தினமும் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.