Winter Skin Care Alert : குளிர்காலத்தில் சருமம் பராமரிப்பில் சில பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதில் என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
தற்போது குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பருவத்தில் சருமத்தை கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் இந்த சீசனில் வறண்ட மற்றும் குளிர்ந்த காற்று காரணமாக சருமத்தில் வறட்சி எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால்தான் இந்த பருவத்தில் சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவை என்பதற்கு இதுவே காரணம்.
24
Winter Skin Care Alert In Tamil
பொதுவாக இந்த குளிர்காலத்தில் நம்முடைய சருமத்தை பராமரிக்க நாம் சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவோம். மேலும் அதுதான் சருமத்திற்கு பாதுகாப்பானவை என்று நாம் நம்புகிறோம். ஆனால், இந்த சீசனில் சரும பராமரிப்பில் சில பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அது என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
சரும பராமரிப்பில் தேன் நல்லது என்றாலும், குளிர்காலத்தில் இதை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் குறிப்பாக உங்களது சருமம் ரொம்பவே உணர்ந்து வாய்ந்ததாக இருந்தால், தேன் துளைகளை அடைத்து விடும். எனவே குளிர்கால தோல் பராமரிப்பில் தேன் பயன்படுத்துவது நல்லது.
சர்க்கரை:
உங்கள் சரும பராமரிப்பில் நீங்கள் சர்க்கரையை ஸ்க்ரப்பாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் குளிர்காலத்தில் இதை பயன்படுத்துவது நல்லதல்ல. இது உங்கள் சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணையை அகற்றி, முகத்தை வறட்சியாகவும் இறுக்கமாகவும் மாற்றிவிடும் எனவே அதை தவிர்ப்பது தான் நல்லது.
பால் இயற்கையாகவே சரும பராமரிப்பில் ரொம்பவே நல்லது. ஆனால் இந்த குளிர்காலத்தில் பாலில் இருக்கும் லாட்டிக் அமிலம் சருமத்தில் கடுமையான விளைவை ஏற்படுத்தும். அதாவது வறட்சி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.
மஞ்சள்:
சரும பராமரிப்பில் மஞ்சள் பயனுள்ளதாக இருந்தாலும், உங்கள் சருமம் உணர்திறன் உடையதாக இருந்தால், இந்த குளிர்காலத்தில் சரும பராமரிப்பில் மஞ்சள் பயன்படுத்துவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் சருமத்தில் எரிச்சல் புள்ளிகளை ஏற்படுத்தும்.