
தற்போது மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் பெரும்பாலான மக்கள் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதிகரித்த எடையை குறைக்க பலர் பலவிதமான முயற்சிகளை செய்து வருகிறார்கள். சிலர் ஜிம்மிற்கு சென்று எடையை குறைக்கிறார்கள். இன்னும் சிலர் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றின் மூலம் எடையை குறைத்து வருகின்றனர். ஆனால், இவை இரண்டும் இல்லாமல் மற்றும் சிலர் குறுக்கு வழியை தேடுகிறார்கள். அதாவது சீரக தண்ணீர், தேன் எலுமிச்சை கலந்த பானம் போன்ற பானங்களை குடிக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் எடை இழப்புக்கு மக்கள் மத்தியில் தற்போது 'லெமன் காபி' பிரபலமாக இருக்கிறது.
லெமன் காபி கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது என்று பலர் தங்களது அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். கூடுதலாக இந்த காபி தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கும் என்றும் சொல்லுகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எலுமிச்சை மற்றும் லெமனின் சிறப்பு:
இவை இரண்டும் எல்லார் வீட்டின் சமையலறையில் கண்டிப்பாக இருக்கும். எலுமிச்சையில் பல சத்துக்கள் உள்ளன. எலுமிச்சையில் பல சத்துக்கள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதுபோல காபியும் நல்லது. எனவே எடை குறைப்பதற்கு இவை இரண்டும் நன்மை பயக்கும். எப்படியெனில், காபியில் இருக்கும் காஃபின் நரம்பு மண்டலத்தை தூண்டி வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவுகிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. அதுபோல எலுமிச்சை சாறு வயிறை நீண்ட நேரம் திரும்பி இருக்க செய்யும். அதுபோல இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றம் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை தடுக்கவும் உதவுகிறது.
லெமன் காபி எடையை குறைக்க எப்படி உதவுகிறது?
பிளாக் காபியில் இருக்கும் காஃபைன் உடலில் மெட்டாபாலிசத்தை அதிகரித்து, எடையை குறைக்க உதவுகிறது அதுபோலவே எலுமிச்சையில் இருக்கும் சிற்றிதழாம் உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்து எடையை குறைக்கும்.
இதையும் படிங்க: காலையில பால் டீயா குடிக்குறீங்க? அட! இந்த மூலிகை டீ குடிங்க.. எடை சர்ருனு குறையும்!!
ஒருநாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்?
இந்த காபியை ஒரு நாளைக்கு நீங்கள் 1-2 கப் குடிக்கலாம். அதற்கு மேல் எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த லெமன் காஃபியை உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்து விடும் என்று நீங்கள் மூடத்தனமாக நம்ப வேண்டாம். இதனுடன் தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க முடியும். ஆக இந்த காஃபியை நீங்கள் இரவு தூங்கும் முன் ஒருபோதும் குடிக்க வேண்டாம் இல்லையெனில் உங்கள் தூக்கம் பாதிக்கப்படும்.
இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் '6' பழங்கள்... ஆனா இப்படி சாப்பிட்டாதா நன்மை!
லெமன் காபி தயாரிக்கும் முறை:
ஒரு கப்பில் எலுமிச்சை சாறு பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் அரை ஸ்பூன் காபி பவுடர் மற்றும் சூடான நீரை சேர்த்து நன்றாக கலக்கவும் அவ்வளவுதான் லெமன் காபி தயார். இதில் இனிப்புக்காக தேன், சர்க்கரை போன்ற எதையும் சேர்க்கக்கூடாது.