இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அதனால். தினமும் இஞ்சி சாறு குடித்தால உடலில் இத்தனை நாள் சேர்ந்து இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். தினமும் இஞ்சி சாறு குடிப்பதால் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நீங்கள் அஜீரணம், வாயு , அஜீரணத்தால் அவதிப்பட்டால், தினமும் உங்கள் உணவில் 2 டீஸ்பூன் இஞ்சி சாற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இஞ்சியில் உள்ளன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. தினமும் இஞ்சி சாறு குடிப்பதால் மூட்டு வலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். மாறிவரும் காலத்தில் தினமும் இஞ்சி சாறு குடித்தால், அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி , இருமலில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.