
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மசாஜ் செய்வது மிகவும் அவசியம். மசாஜ் செய்வதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் மேம்படும் மற்றும் உடல் சோர்வு குறையும். அந்தவகையில், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் வலி, மூட்டு வலி செரிமான பிரச்சனை, பிறப்புறுப்பு வறட்சி போன்ற பிரச்சினைகள் அடிக்கடி வரும். இவற்றை சரி செய்ய அவர்கள் பல வகையான மருந்துகளை சாப்பிடுகிறார்கள். ஆனால் சில சமயங்களில் அவற்றால் நிவாரணம் கிடைக்காது.
இத்தகைய சூழ்நிலையில், பெண்கள் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் பளபளக்கும். ஆமணக்கு எண்ணெயில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே, பெண்கள் தங்களது தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: விளக்கெண்ணெய் மலச்சிக்கலுக்கு பயன்படுத்துவாங்க... ஆனா தினமும் குடிக்கலாமா?
1. மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்:
பொதுவாக மாதவிடாய் வருவதற்கு முன் பின் வயிறு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கால் வலி வரும். இத்தகைய சூழ்நிலையில், பெண்கள் தங்களது தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்து வந்தால், இந்த வலி அனைத்திலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
2. பிறப்புறுப்பு வறட்சி நீங்கும்:
பெண்களின் பிறப்புறுப்பில் வறட்சி, எரிச்சல் ஏற்படும். எனவே, இந்த பிரச்சினையை போக்க ஆமணக்கு எண்ணெய் தான் சிறந்தது. ஆம், ஆமணக்கு எண்ணெயை பெண்கள் தொப்புளில் தடவி மசாஜ் செய்து வந்தால், பிறப்புறுப்பு வறட்சி குறையும். ஆமணக்கு எண்ணெய் பிறப்புறுப்புக்கு ஊட்டமளிக்கிறது.
3. செரிமானத்தை மேம்படுத்தும்:
பெண்கள் தங்களது தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் தடவி வந்தால் செரிமானம் மேம்படும். அதாவது ஆமணக்கு எண்ணெய் உடலுக்கு ஊக்கமளித்து செரிமான பிரச்சனைகளை நீக்கி, மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
4. மூட்டு வலியில் இருந்து நிவாரணம்:
மூட்டு வலியால் அவதிப்படும் பெண்கள் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்து வந்தால் மூட்டு வலி, வீக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: உடல் சூட்டில் இருந்து வாத பிரச்சனை வரை ஒரே தீர்வு "ஆமணக்கு எண்ணெய்"...'இதுக்கு' கூடவா இந்த எண்ணெய் யூஸ் ஆகுது!
5. சருமத்திற்கு நன்மை பயக்கும்:
பெண்கள் தங்களது தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் தடவி வந்தால் தோல் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். ஏனெனில் ஆமணக்கு எண்ணெயில் இயற்கையாகவே கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் வயது எதிர்ப்பு பிரச்சனை, வீக்கத்தை குறைக்கிறது.
எப்படி தடவ வேண்டும்?
பெண்கள் தங்களது தொப்புளில் 2-3 துளி ஆமணக்கு எண்ணெயை போட்டு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். உங்களது உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசித்த இதை முயற்சி செய்யுங்கள்.