
பேக்கிங் சோடா சோடியம் பைகார்பனேட் என்றும் அழைக்கப்படுகிறது. பேக்கிங் சோடா பெரும்பாலும் பேக்கிங்கிற்காக சமையலறையில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. பேக்கிங் சோடா பல உணவுகள் மற்றும் பானங்களில் பயன்படுத்தப்பட்டாலும், சமையலறை, குளியலறை, கழிவறை மற்றும் பல பொருட்களை எளிதாக சுத்தம் செய்வதற்கும் பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது.
அந்தவகையில், பலர் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து குடிப்பது நல்லது என்று சொல்லுகிறார்கள். இதனால் செரிமான பிரச்சனைகள் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். மேலும் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் பல பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாமாம்.
ஹெல்த் அறிக்கையின் படி, பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து குடித்தால் உடலுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால், பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து குடித்தால் உண்மையில் நல்லதா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். எனவே, பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பதை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படிங்க: இட்லியை புஸ்ஸுன்னு வர்ரதுக்கு மாவில் பேக்கிங் சோடா யூஸ் செய்தால் இந்த பிரச்சனைகளும் ஃபிரீயாவே வந்துரும் !
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
1. செரிமான அமைப்பைப் மேம்படுத்தும்
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் செரிமான அமைப்பை மேம்படுத்தப்படும். பேக்கிங் சோடா தண்ணீரை நாம் குடிக்கும் போது வயிற்றில் அமிலத்தின் விளைவை நடுநிலையாக்குகிறது. இதனால் வாயு, வயிற்று வலி, அமில ரிப்ளக்ஸ் போன்ற பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. மேலும் செரிமான பிரச்சனைகளுக்கு இது இயற்கை மருந்து என்று கூட சொல்லலாம்.
2. உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கும்
பேக்கிங் சோடாவில் சோடியம் போன்ற தாதுக்கள் இருக்கிறது. எனவே பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து குடித்தால் உடலில் நீரேற்றம் அதிகரிக்க உதவும் என்று பல ஆய்வுகள் சொல்லுகின்றன. மேலும் பேக்கிங் சோடா நீரை குடிக்கும்போது, உடலில் திரவ சமநிலையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. அதுவும் குறிப்பாக உடற்பயிற்சியின் பேக்கிங் சோடா நீரை குடிப்பது ரொம்பவே நன்மை பயக்கும்.
3. தசை சோர்வை குறைக்கும்
தசை செயல்பாட்டிற்கு நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் பேக்கிங் சோடா தசை சகிப்புத்தன்மையை அதிகரிக்கும் என்று சில ஆய்வுகள் சொல்லுகின்றன. எனவே உடற்பயிற்சி போது பேக்கிங் சோடா நீரை குடித்தால் தசை சோர்வை குறைத்து, நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய உதவுகிறது.
4. அலர்ஜி பிரச்சனைகளுக்கு நல்லது
பேக்கிங் சோடாவில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது.
பேக்கிங் சோடா தண்ணீர் தீமைகள்:
பேக்கிங் சோடா நீரானது உடலில் இயற்கையான pH ஒழுங்கு முறையை சீர்குலைத்து வளர்ச்சிதை மாற்ற கோளாறுக்கு வழி வகுக்கும். உங்கள் ரத்தம் மற்றும் உடல் திரவங்களில் அடிப்படைகள் அல்லது காரங்கள் அதிகமாக இருக்கும் போது இது மாதிரி நிகழ்கிறது. இதன் விளைவாக எரிச்சல், தசை இழுப்பு, தசை பிடிப்பு, சோர்வு மற்றும் குழப்பம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
பேக்கிங் சோடா நீரை யாரெல்லாம் குடிக்க கூடாது?
இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளவர்கள் இந்த பானத்தை ஒருபோதும் குடிக்கவே கூடாது. ஏனெனில் இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும்.
அதுபோல நீங்கள் சில மருந்துகளை எடுத்துக் கொண்டால் பேக்கிங் சோடா நீரை குடிக்க வேண்டாம் இல்லையெனில் இது சில பக்க விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு:
பேக்கிங் சோடா நீரை குடிப்பது நல்லது என்றாலும், தொடர்ந்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிகமாகவும் குடிக்க வேண்டாம். முக்கியமாக, உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் இந்த நீரை குடிப்பதற்கு முன் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.
இதையும் படிங்க: பேக்கிங் சோடாவை 1 ஸ்பூன் 'இப்படி' பயன்படுத்தினால் மொத்த வீட்டையும் பளீச்னு சுத்தம் பண்ணிடலாம்!!