
பழங்கள் என்றாலே அது மிகவும் சத்தானது என்பதை நாம் ஏற்கனவே அறிந்ததே. இவை நம் உடல் நலத்திற்கு மட்டுமின்றி மனதிற்கும் புத்துணர்வை அளிக்க உதவுகிறது. பழங்களில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் உள்ளன. அவை அனைத்தும் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
ஒவ்வொரு பழங்களும் அதன் தன்மைக்கேற்ப வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை, இரவில் சாப்பிட வேண்டியவை, சாப்பிடுவதற்கு முன் மற்றும் பின் என சாப்பிட வேண்டியை என்று அதற்கென சரியான நேரம் காலம் உள்ளது. அதற்கு ஏற்றார் போல சரியான நேரத்தில் பழங்களை சாப்பிட்டு வந்தால் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.
அந்த வகையில் கொய்யாப்பழத்தை எந்த நேரத்தில் சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக பெறமுடியும் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை குறித்து இப்போது இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கொய்யா பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
கொய்யாப்பழத்தில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன அதாவது பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
இதுதவிர, கொய்யாப்பழத்தில் ஏராளமான பைட்டோநியூட்ரின்கள் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
கொய்யா பழத்தின் நன்மைகள்:
கொய்யாப்பழம் பலவிதமான பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் குறிப்பாக இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்று தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பிற நன்மைகள்:
உடல் எடையை குறைக்கும்
கொய்யா பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதிலிருந்து எடையை குறைப்பது வரை பெரிதும் உதவுகிறது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுங்கள்.
வளரும் குழந்தைகளுக்கு நல்லது
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, பைட்டமின் ஏ, வைட்டமின் இ, பொட்டாசியம், நார்ச்சத்து, போலிக் அமிலம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும் ஒரு கொய்யாவை உங்களுக்கு குழந்தைக்கு கொடுத்து வந்தால் அவர்கள் ரொம்பவே ஆரோக்கியமாக இருப்பார்கள்.
மலச்சிக்கலை தீர்க்கும்
கொய்யா பழத்தில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. அதுவும் ஒரே நாளில் மலச்சிக்கலை தீர்க்கும் சக்தி இந்த பழத்திற்கு உள்ளது. எனவே மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வாருங்கள். இது தவிர கொய்யாப்பழமானது தொப்பையை குறைக்கவும், அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கவும் உதவுகிறது.
சருமத்திற்கு நல்லது
கொய்யா பழத்தில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தோல் சுருக்கத்தை நீக்கி, சருமத்தை பொலிவாக வைத்திருக்க பெரிதும் உதவுகின்றது. மேலும் உடலை குளிர்ச்சியாக வைக்கும். தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் பிற அழகு சாதன பொருட்களை காட்டிலும் கொய்யாப்பழம் உங்கள் சருமத்திற்கு பொலிவாக வைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதையும் படிங்க: பலரும் புறக்கணிக்கும் கொய்யாப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா? கண்டிப்பா சாப்பிடுங்க..
கொய்யாப்பழம் சாப்பிட்டால் சரியான நேரம் எது?
கொய்யா பழத்தை பகல் மற்றும் மதியம் நேரங்களில் மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் குறிப்பாக மதிய உணவுக்கு பிறகு சுமார் 2 மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்று தொடர்பான அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
கொய்யா பழத்தை எப்போது சாப்பிடக்கூடாது?
கொய்யா பழத்தை மாலை மற்றும் இரவு நேரங்களில் சாப்பிட கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். மீறி சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும்.
இதையும் படிங்க: "சிவப்பு கொய்யா" சர்க்கரை நோயாளிகளுக்கு கடவுள் தந்த வரபிரசாதம்! ஏன் தெரியுமா..?