துர்கா பூஜையில் ஜெயா பச்சன், கஜோல்!!

Published : Oct 10, 2024, 11:29 PM IST

மும்பையில் நடைபெற்ற துர்கா பூஜை கொண்டாட்டத்தில் ஜெயா பச்சன் மற்றும் நடிகை கஜோல் கலந்து கொண்டனர். அப்போது, ஜெயா பச்சன், நடிகை கஜோலை கட்டி அணைத்து அன்பு பாராட்டினார். 

PREV
18
துர்கா பூஜையில் ஜெயா பச்சன், கஜோல்!!
ஜெயா பச்சன், காஜோல்

துர்கா பூஜையில் கலந்து கொண்ட ஜெயா பச்சன் மற்றும் கஜோல் இருவரும் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். ஜெயா முதலில் கஜோலை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறினார்.

28
ஜெயா பச்சன், கஜோல்

துர்கா பூஜையில் கலந்து கொண்ட ஜெயா பச்சன் மஞ்சள் நிற புடவையில் காட்சியளித்தார். அதே நேரத்தில் கஜோல் பீச் வண்ணத்தில் புடவை அணிந்திருந்தார்.

38
ஜெயா பச்சன்

துர்கா பந்தலில் இருந்த விருந்தினர்களை ஜெயா பச்சன் சந்தித்தார். இந்த சந்தர்ப்பத்தில், அவர் அனைவருடனும் சிரித்துப் பேசினார்.

48
கஜோல், தேவ் முகர்ஜி

கஜோல் தனது சித்தப்பா தேவ் முகர்ஜியிடம் பேசி, அவரை கட்டிப்பிடிப்பது போல் காணப்பட்டார். தேவ் தான் இயக்குனர் அயன் முகர்ஜியின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

58
நடிகை கஜோல்

துர்கா பந்தலில் கஜோல் சகஜமாக பழகினார். அவர் சில சமயங்களில் மக்களை நகரச் சொல்வதும், சில சமயங்களில் சத்தமாக சிரிப்பதுமாக இருந்தார். 

68
ஜெயா பச்சன், கஜோல்

ஜெயா பச்சன் மற்றும் கஜோல் இடையே புரிதல் காணப்பட்டது. இருவரும் நீண்ட நேரம் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர். 

78
ஜெயா பச்சன், கஜோல்

கஜோல், ஜெயா பச்சனுடன் சேர்ந்து ஊடக புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தார். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் துர்கா பூஜையில் இருவரும் கலந்து கொள்வார்கள். இருவரும் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் நெருக்கும் இருக்கும்.

88
யக், கஜோலின் மகன்

கஜோலின் மகன் யக்வும் துர்கா பூஜையில் கலந்து கொண்டார். இந்த சந்தர்ப்பத்தில், யக் பைஜாமா குர்தா அணிந்திருந்தார்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories