Piles Problem: மூல நோய் உங்களை பாடாய் படுத்துதா..? அப்ப இந்த உணவுகளுக்கு இனி 'குட்பை' சொல்லுங்கள்..

Published : Aug 19, 2022, 03:11 PM ISTUpdated : Aug 19, 2022, 03:14 PM IST

Piles Problem: மூல நோய் பிரச்சனை உங்களை பாடாய் படுத்தது என்றால், இந்த உணவுகளை கட்டாயம் விலக்கி வைக்க வேண்டும். 

PREV
16
Piles Problem: மூல நோய் உங்களை பாடாய் படுத்துதா..? அப்ப இந்த உணவுகளுக்கு இனி 'குட்பை' சொல்லுங்கள்..
Piles Problem:

பைல்ஸ் நோய்க்கு மிகப்பெரிய காரணம் மலச்சிக்கல் ஆகும். இது தவறான உணவுப்பழக்கம் மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் ஏற்படுகிறது. இந்த நோயால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பைல்ஸ் பிரச்சனையைப் புறக்கணித்தால், மலக்குடலில் இருந்து ரத்தம் வந்து, குடல் இயக்கத்தில் சிரமம் ஏற்படும்.

மேலும் படிக்க...Liver: கோழி ஈரல் சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்து நன்மைகள்...இது தெரிந்தால் இனி மிஸ் பண்ணவே மாட்டீர்கள்

 

26
Piles Problem:

பைல்ஸ் என்பது ஆசனவாயின் உள்ளேயும் வெளியேயும் வீக்கமடையும் ஒரு நோயாகும். பைல்ஸ் பெரும்பாலும், பெரியவர்களை தான் குறி வைத்து தாக்கும். அதிலும், பெண்களை விட ஆண்களுக்கு இது அதிகமாக ஏற்படுகிறது. எனவே, நாம் இந்த பதிவின் மூலம் எந்தெந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதை பார்த்து தெரிந்து கொள்வோம். 

36
Kitchen Tips

சிவப்பு மிளகாயை தவிர்க்கவும்:

மூல நோயாளிகள் தங்கள் உணவில் மிளகாய் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.  ஏனெனில், மூலநோய் நோயாளிகள் மிளகாயை உட்கொண்டால், அவர்களுக்கு அதிக வலி மற்றும் எரியும் பிரச்சினைகள் ஏற்படும். இந்த மசாலாவை உட்கொள்வது மலம் கழிக்கும் போது எரியும் உணர்வை ஏற்படுத்தும்.  

மேலும் படிக்க...Liver: கோழி ஈரல் சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்து நன்மைகள்...இது தெரிந்தால் இனி மிஸ் பண்ணவே மாட்டீர்கள்

46
Kitchen Tips

இஞ்சியை தவிர்க்கவும்:

பைல்ஸ் நோயாளிகள் இஞ்சியை அதிகம் உட்கொள்ள வேண்டாம். இஞ்சியை உட்கொள்வதால், பைல்ஸ் நோயாளிகளுக்கு மலத்துடன் இரத்தம் வர வாய்ப்புள்ளது. இஞ்சியை உட்கொள்வது வாயு, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். இஞ்சியை உட்கொள்வதால் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. பைல்ஸ் நோயாளிகள் தங்கள் உணவில் இஞ்சியைத் தவிர்ப்பது நல்லது.

56
Kitchen Tips

காரமான உணவுகள்:

காரமான உணவுகள், வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மதுபானம், பால் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் அதிக உப்பு போன்ற உணவுகளை உட்கொள்வது மூல்நோய்க்கு வழிவகுக்கிறது.  

66
Piles Problem:

எனவே, மூல நோய்க்கு பாத் டப் குளியல் நன்றாகவே பலனளிக்கும். கற்றாழை மூல நோயை தடுக்க உதவக்கூடிய பொருள் ஆகும். பைல்ஸ் நோயாளிகளுக்கு முள்ளங்கி சிறந்த ஒன்றாகும்.முள்ளங்கி ஜூஸ் பைல்ஸ் பிரச்சனைக்கு மிகவும் அற்புதமான பானம். தினமும் காலை மற்றும் மாலை அரை கப் முள்ளங்கி ஜூஸ் குடிக்க வேண்டும். மூல நோயால் மிகவும் அவதிப்படுபவர்கள் வேண்டுமானால் இதை முயற்சித்துப் பாருங்கள்.

மேலும் படிக்க...Liver: கோழி ஈரல் சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்து நன்மைகள்...இது தெரிந்தால் இனி மிஸ் பண்ணவே மாட்டீர்கள்

Read more Photos on
click me!

Recommended Stories