Cleopatra: பேரழகி கிளியோ பாட்ராவின் தற்கொலைக்கு இதுதான் காரணமா.? இதுவரை வெளிவராத மர்ம முடிச்சுகள்

First Published Aug 19, 2022, 1:41 PM IST

Cleopatra Death: எகிப்த் நாட்டின் பேரழகி கிளியோபாட்ரா தற்கொலை பற்றி இதுவரை வெளிவராத மர்ம முடிச்சுகள் குறித்து இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

Cleopatra Death:

பெண்கள் என்றாலே அழகுதான். அவ்வாறு வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. பேரழகியான இவரின் அழகை கண்டு மயங்காத ஆண் விழியே கிடையாது என்று பல வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன. இவர், கிமு 69 முதல் கிமு 30 காலத்தில் வாழ்ந்தவள். ஆனால், இவரின் மரணம் இன்றும் விடை கண்டுபிடிக்க முடியாத..? மர்மாகவே உள்ளது. 

Cleopatra Death:

தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா, தன்னுடைய 14 வயதில் தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்து கொண்டாள். தந்தை இறந்த பின்னர் தனது 18 வது வயதில் அரசியானாள். தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள். எகிப்து மக்கள் கிளியோபாட்ராவை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.

மேலும் படிக்க....Standing Position: நின்றவாறு குழந்தை பெற்ற சங்க கால பெண்கள்...தாராசுரம் கோவில் கல்வெட்டுகள் கூறுவது என்ன?

Cleopatra Death:

அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்த முடியாது என்பதால், தன்னை விட 10 வயது இளைய சகோதரனான 13 ஆம் தாலமியை திருமணம் செய்துகொண்டாள். பின்னர்  ஒரு கட்டத்தில், நாட்டையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க ரோம் நாட்டின் பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள் கிளியோபாட்ரா. 54 வயதான சீசரை தனது காதல் வலையில் வீழ்த்தினாள். தன்னுடைய 21 வயதில் கிளியோபாட்ரா சீசரின் மகனுக்கு தாயானாள்.இந்த உறவு குறித்து பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. 

Cleopatra Death:

ரோமானியர்களால் சீசர் கொல்லப்பட்ட பின்னர், கிளியோபாட்ரா, ரோம பேரரசின் தளபதி மார்க் ஆன்டனியிடம் உறவு கொண்டு  மூன்று குழந்தைகளை பெற்றார். அவர் கிளியோபாட்ராவை ராணிகளுக்கெல்லாம் ராணி (Queen of Queens) என்றும் அறிவித்து தன்னை அரசர்க்கெல்லாம் அரசன் (King of Kings) என்றும் அறிவித்துக் கொண்டார்.

Cleopatra Death:

அழகின் மீது தீராத காதல் கொண்ட கிளியோபாட்ரா, இராஜ்ஜிய வருமானத்தில் 50 சதவீதத்தை தனது ஆடம்பர வாழ்க்கைக்காகவும், அழகை பராமரிக்கவும் பயன்படுத்தினார். மீதி வருமானத்தை மட்டுமே இராஜ்ஜியத்திற்காக பயன்படுத்தினார். 

Cleopatra Death:

ஜூலியஸ் சீசரின் வாரிசான ஆக்டேவியஸ் சீசர் கி.மு 30-ல் எகிப்து மீது போர் தொடுத்தார். இந்த போரில் தளபதி ஆன்டனி தோற்று தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, கிளியோபாட்ராவும் அவளது குழந்தைகளும் சிறை பிடிக்கப்பட்டனர். 

மேலும் படிக்க....Standing Position: நின்றவாறு குழந்தை பெற்ற சங்க கால பெண்கள்...தாராசுரம் கோவில் கல்வெட்டுகள் கூறுவது என்ன?

Cleopatra Death:

இதன் பின்னர் கிளியோபாட்ரா தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், கிளியோபாட்ராவின் தற்கொலை இன்றும் மர்மமானதாகவே இருக்கிறது. சிறையில் இருந்து தப்பிய போது எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம்கொண்ட நல்ல பாம்பைகடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Cleopatra Death:

மேலும், ஓபியம் என்ற கஷாயம் அருந்தி மரணமைடைந்தால் என்றும் கூறப்படுகிறது. கிளியோபாட்ராவின் தனிப்பட்ட மருத்துவராக இருந்த ஒலிம்பஸ் எகிப்திய நாகத்தால், கிளியோபாட்ரா இறந்ததாக கூறப்பட்டதை முற்றிலுமாக மறுத்தார். கிளியோபாட்ரா எப்போதும் விஷம் ஏற்றப்பட்ட சீப்பை தன்னுடன் வைத்திருப்பார், அதனைக்கொண்டு தனது உடலில் கிழித்துக் கொண்டதாக கூறியுள்ளார்.

Cleopatra Death:

இப்போதும் இவரின் மரணம் குறித்து ஆராய்ச்சிகளில் பல்வேறு புதிய புதிய தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இன்றுவரை அவளது மரணத்திற்கான உண்மையான காரணம் மர்மமாகவே உள்ளது. 

மேலும் படிக்க....Standing Position: நின்றவாறு குழந்தை பெற்ற சங்க கால பெண்கள்...தாராசுரம் கோவில் கல்வெட்டுகள் கூறுவது என்ன?

click me!