Standing Position: நின்றவாறு குழந்தை பெற்ற சங்க கால பெண்கள்...தாராசுரம் கோவில் கல்வெட்டுகள் கூறுவது என்ன?

First Published Aug 19, 2022, 11:21 AM IST

Darasuram Temple: சங்ககாலத்தில் வாழ்ந்துள்ள பெண்கள் நின்றவாறு குழந்தை பெற்றுள்ளனர். இதை உறுதிபடுத்தும் வகையில் தஞ்சை தாராசுரம் கோவிலில் பல்வேறு வகை கல்வெட்டுகள் உள்ளன.

darasuram

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் பேறு காலம் என்பது மிகவும் மறக்க முடியாத தருணம் ஆகும். ஒவ்வொரு பெண்ணும் குழந்தை பெற்று கொள்ளும் போது, மறு ஜென்மம் எடுத்துள்ளதாக உணர்வார்கள். ஏனெனில், இந்த பிரசவ காலம் சிலருக்கு சிக்கலை ஏற்படுத்தும். சில நேரம் உயிரிழப்பு கூட ஏற்படும். 

மேலும் படிக்க ...Onion juice: தினமும் வெறும் வயிற்றில் வெங்காயச் சாறு குடிங்க..நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத நன்மை இருக்கு

darasuram

நவீன காலத்தில் மருத்துவ வசதிகள் ஏராளம் உள்ளன. இருப்பினும், அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை, பெண்கள் மகப்பேறின் போது, படுத்த நிலையில் தான் குழந்தை பெற்று வருகின்றனர் என்பது தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், அப்படி நினைத்தால் அது முற்றிலும் தவறானது, சங்ககாலத்தில் நம் முன்னோர்கள் நின்றவாறு குழந்தை பெற்றுள்ளனர். என்னது நின்றவாறா..? என்று பலருக்கும் ஆச்சரியமாக  இருக்கிறது அல்லவா...ஆம் இதை உறுதிபடுத்தும் வகையில்  தஞ்சை தாராசுரம் கோவிலில் பல்வேறு வகை கல்வெட்டுகள்உள்ளன.
 

darasuram

மகப்பேறு என்பது குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கு ஒரு புது பிறப்பு ஆகும். இந்த மகப்பேறு மூலம் எவ்வளவு சோதனைகள், வலிகள் கடந்து நம் சந்ததி வந்திருக்கும். இது குறித்து சங்கம் பாடல்களில், கிமு 5ல் தெளிவாக விளக்கப்பட்டு் இருக்கிறது.

மேலும் படிக்க ...Onion juice: தினமும் வெறும் வயிற்றில் வெங்காயச் சாறு குடிங்க..நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத நன்மை இருக்கு

சங்கம் பாடல்களின் குறிப்பு:

குழந்தை பிறந்த பிறகு, தாயை நெய் சேர்த்து குளிக்க வைப்பது, நற்றிணையில் குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று கலிங்கத்து பரணியில், குழந்தை பிறந்த பிறகு, இடுப்பில் கட்டபடும் சங்கு, சக்கரம், வாள், வில் மற்றும் தண்டாயுதம் என்று 5 பொருள்கள் கட்டப்படும் என்பதும், மேலும் பிறந்த குழந்தையை தொட்டிலில் இட்டு, காது குத்தி, தாய்பால் ஊட்ட என்பம் குறிப்பிட்டுள்ளது. 

darasuram

தஞ்சை ஐராவதீஸ்வரர் கோவில்


தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகில் தான் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இரண்டாம் ராஜராஜ சோழன் மூலம் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 
 
 

darasuram

சோழர்களின் கட்டிடக் கலை சிறப்பு:

சோழர்களின் கட்டிடக் கலையை விளக்கும் சிற்பங்கள் நிறைந்த இந்த கோவிலை சுற்றி ஏராளமான கல்வெட்டுகள் அமைந்துள்ளன. சோழர்கள் கலை ரசனை மிக்கவர்கள் என்பதை உணர்த்தும் வகையில் இந்த தலம் முழுவதும் நுணுக்கமான பல்வேறு கட்டிடங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் தாராசுரம் கோவிலிலும் நடனக் காட்சிகள், போர்க் காட்சிகள், மத நிகழ்வுகள், ரிஷிகள், விலங்குகள், கற்பனை உருவங்கள் என பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

darasuram

நின்றவாறு குழந்தை பெற்ற சங்ககால பெண்கள்:

இதன் மற்றொமொரு சிறப்பாக இந்த கோவிலில் தான் பெண்கள் நின்றவாறு குழந் சங்ககால பெண்களை குறிக்கும் சிற்பம் உள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் இதே போன்ற கல்வெட்டுகள் பெண்கள் நின்றவாறு குழந்தை பெற்றதை உறுதிபடுத்தி இருக்கின்றது. இன்றும் நீங்கள் ,இந்த சிற்பங்களை  தஞ்சாவூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் கும்ப கோணத்துக்கு சற்று முன்பாக அமைந்துள்ளது இந்த தாராசுரம் கோவில் சென்றால் பார்க்கலாம். 

மேலும் படிக்க ...Onion juice: தினமும் வெறும் வயிற்றில் வெங்காயச் சாறு குடிங்க..நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத நன்மை இருக்கு

click me!