World Photography Day 2022: ஒரு செல்ஃபி எடுக்கலாமா? உலக புகைப்பட தினம்...இதன் வரலாற்று முக்கியத்துவம் என்ன..?

First Published Aug 19, 2022, 9:59 AM IST

World Photography Day 2022: புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில்,  ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ம் தேதி உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

World Photography Day 2022:

புகைப்பட கலையை ஊக்குவிக்கும் வாய்ப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ம் தேதி உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சில நேரம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளை, ஒரு புகைப்படம் எளிதாக உணர்த்திவிடும். 

மேலும் படிக்க ....Horoscope Today: ரிஷப லக்னத்தில் கோகுலாஷ்டமி யோகம்...கிருஷ்ண ஜெயந்தி நாளில் இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..
 

World Photography Day 2022:

புகைப்படங்கள், நமது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை காலத்துக்கும் நினைவில் இருக்கும்படி பதிவு செய்கின்றன.புகைப்படங்களின் மூலம் இன்றைய நவீன காலத்து, இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் செய்கைகளின் இனிமையான நினைவுகளாக சேகரித்து வருகிறார்கள்.

. World Photography Day 2022:

குறிப்பாக இந்த நாள் புகைப்பட துறையின் படைப்பாற்றல் மற்றும் நுணுக்கங்களைக் கொண்டாடும் விதமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த நூற்றாண்டுகளில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் உலக வரலாற்றையே மாற்றியது. பல சகாப்தங்களாக உலகைக் கவர்ந்த இந்த கலை வடிவத்தைத் தொடர அதிகமான மக்களை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க ....Horoscope Today: ரிஷப லக்னத்தில் கோகுலாஷ்டமி யோகம்...கிருஷ்ண ஜெயந்தி நாளில் இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..

 

World Photography Day 2022:

இந்த தினத்தின் வரலாறு:

கடந்த 13ம் நூற்றாண்டில் கேமரா அப்ஸ்குரா என்ற கருவி மூலம் புகைப்படக்கலை, தனது பயணத்தை தொடங்கியது.  முதன்முதலில் 1837 இல் இந்த தினம் கொண்டாடப்பட்டது. லுாயிசு டாகுவேரே என்பவர், ஜோசப் நைஸ்போர் நீப்ஸுடன் இணைந்து டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,1839 ஆம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். அவர்தான், இக்கலைக்கு 'போட்டோகிராபி' என்று பெயர் வைத்தார்.

World Photography Day 2022:

முதல் டிஜிட்டல் கேமரா..?

முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981 ஆம் ஆண்டு தயாரித்தது. அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது மிகவும் அரிதான செயலாக இருந்தது. ஆனால், தற்போது நவீன வசதியால் ஸ்மார்ட்போன் போன்றவற்றை பயன்படுத்தி யார் வேண்டுமெனாலும் எளிதாக புகைப்படத்தை எடுக்கலாம். 

World Photography Day 2022:

நவீன காலத்து செல்ஃபி புகைப்படம்:

இன்றைய நவீன காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை செல்ஃபி எடுப்பது அதிகரித்து வருகிறது. இருப்பினும், காலத்தால் அழியாத கறுப்பு வெள்ளையில் அட்டென்சன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை யாராலும் மறக்க முடியாத நினைவாக உள்ளது.

மேலும் படிக்க ....Horoscope Today: ரிஷப லக்னத்தில் கோகுலாஷ்டமி யோகம்...கிருஷ்ண ஜெயந்தி நாளில் இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..

click me!