கிருஷ்ணரின் பிறந்த நாளை கொண்டாடும், கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு 2022ம் ஆண்டு ஆவணி 3, அதாவது ஆகஸ்ட் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள இந்துக்களால், ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறையில் அஷ்டமியோடு வரும் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளுக்கு பாலகிருஷ்ணன் வேடமிட்டு, அந்த கிருஷ்ணரே வீட்டிற்கு வந்ததாக நினைத்து வழிபடுகின்றனர். அதோடு குழந்தைகளின் கால்களை வாசலில் தொடங்கி வீட்டின் பூஜையறை வரை நடக்க வைத்து வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இதனால், குழந்தைகளின் அறிவு மேம்படுவதோடு நல்ல சிந்தனையும் வளரும் என்பது ஐதீகம்