Onion juice: தினமும் வெறும் வயிற்றில் வெங்காயச் சாறு குடிங்க..நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத நன்மை இருக்கு

First Published Aug 19, 2022, 6:08 AM IST

Onion juice: காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வெங்காயச் சாறு குடிப்பதால்..கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக்கொள்ளவும்.

Onion juice

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையை குறைப்பதற்கும் நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் உணவுகளைச் சேர்க்கிறோம். அந்த வரிசையில், வெங்காயத்தில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலுக்கும் முடிக்கும் மிகவும் நன்மை பயக்கும். மேலும், வெங்காயத்தில் நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், சோடியம் போன்ற சத்துக்கள் உள்ளன. 

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் வக்ர பெயர்ச்சியால்..இந்த ராசிகளுக்கு நவம்பர் 24 வரை சோதனை காலம், உஷார் தேவை..!

Onion juice

உடலின் பல்வேறு பணிகளை நமது சமையல் அறையில் தினமும் பயன்படுத்தும் வெங்காயம் செய்துவிடும். வெங்காயத்தைஎப்படி  வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். அப்படியான வெங்காயத்தை ஜூஸ் வடிவத்திலும் சாப்பிடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படியாக, வெறும் வயிற்றில் வெங்காய சாற்றை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

Onion juice

தோல் மற்றும் முடிக்கு சிறந்தது:

வெங்காயம் சாறு வெறும் வயிற்றில்குடிப்பது, முடி மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். அதனை தோல் மற்றும் கூந்தலில் தடவுவதைத் தவிர, வெங்காய சாறு தொடர்ந்து குடிப்பது முடி உதிர்தல், வீக்கம் மற்றும் முகப்பரு போன்ற தோல் பிரச்சனைகளுக்குப்  பல்வேறு பலன்களை தருகிறது. 
 

Onion juice:

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, மக்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். ஆனால் வெங்காய சாற்றில் வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும், சளி, இருமல், காய்ச்சலுக்கு எதிராகப் போராட நமது உடலில் சக்தியை அதிகரிக்க உதவும் பைட்டோ கெமிக்கல்கள் இடம்பெற்றுள்ளது.
 

Onion juice:

 எடை அதிகரிப்பு:

 வெங்காய சாறு குடிப்பது உங்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. வெற்று வயிற்றில் வெங்காயம் மற்றும் தேன் குடிப்பது உடலில் கூடுதலாக சேரும் கொழுப்பை அகற்ற உதவும். இதன் காரணமாக உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது.  

வயிற்றுக்கு நன்மை பயக்கும்:

வெங்காய சாற்றில் இன்யூலின் சேர்மங்கள் உள்ளன. அவை குடல் நுண்ணுயிரிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதை உட்கொள்வதால் உங்கள் செரிமானம் மேம்படும்.

Onion juice:

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்:

வெங்காயச் சாற்றில் க்வெர்செடின் என்ற ஃபிளாவனாய்டு உள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவும். இதன் காரணமாக உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இது உதவுகிறது.

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் வக்ர பெயர்ச்சியால்..இந்த ராசிகளுக்கு நவம்பர் 24 வரை சோதனை காலம், உஷார் தேவை..!

எப்படி தயார் செய்வது..?

ஒரு வெங்காயத்தை உரித்து எடுத்து நறுக்கி, ஒரு கிளாஸில் போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர், காலையில் இந்த தண்ணீரை எடுத்து குடிக்கலாம்.  தினமும் அல்லது ஒரு நாள் விட்டு விட்டு குடிக்கலாம். 

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் வக்ர பெயர்ச்சியால்..இந்த ராசிகளுக்கு நவம்பர் 24 வரை சோதனை காலம், உஷார் தேவை..!

click me!