மழைக்காலத்தில் ஒருவர் உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை, அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், மழைக்காலத்தில் பெரும்பாலும் பல நோய்த்தொற்றுகள் மற்றும் வியாதிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் உட்கொள்ளும் பொழுது, குறிப்பாக மழைக்காலத்தில் சில ஒவ்வாமைகளைத் தூண்டும். பதப்படுத்தப்பட்ட உணவை ஜீரணிக்க வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் அதிக நேரம் எடுக்கும். இவை செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. ஆகையால், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை குளிர்காலத்தில் தவிர்ப்பது நல்லது.
நீங்கள் இனிப்புகளை அதிகம் விரும்பி சாப்பிடும் நபராக இருக்கும் பட்சத்தில், குளிர்காலங்களின் நீங்கள் இனிப்புகளை எடுத்துக்கொள்ளும் போது சர்க்கரையின் அளவுகளை சரிபார்ப்பது அவசியம். ஏனெனில், அதிகப்படியான இனிப்பு சில சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்தியைத் வெகுவாக பாதிக்கும். ஆகையால், குளிர்காலங்களில் குறைந்த அளவு இனிப்பு எடுத்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
46
Healthy Food
தயிர்:
குளிர்காலத்தில் தயிர் போன்ற குளிர்ச்சியான உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், குளிர்ந்த தயிர் சாப்பிடுவது குளிர் மற்றும் இருமலுக்கு ஆளாகக்கூடும்.நீங்கள் தயிர் பிரியர் என்றால் அறை வெப்பநிலையில் மதிய உணவு வேளையில் தயிர் சேர்த்து கொள்ளலாம்.
56
Healthy Food
குளிர் பானங்கள்
பொதுவாக குளிர்காலத்தில் குளிர் பானங்கள், சோடாக்கள் மற்றும் மது பானங்கள் பருகுவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், குளிர் பானங்கள் பருகுவது தொண்டை வலியை அதிகப்படுத்திவிடும். குறிப்பாக மது பானங்கள் பருகினால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடல் வறட்சி அதிகரித்து, சளியின் அளவோடு, காய்ச்சலும் அதிகரித்துவிடும்.
மழைக்காலத்தில் ஒருவருக்கு வைட்டமின் டி பற்றாக்குறை இருக்கும். எனவே, இது போன்ற நேரத்தில் தண்ணீரை சூடு செய்து ஆற வைத்து குடிப்பது நல்லது. மேலும், சாப்பிடும் உணவில் வைட்டமின் டி உள்ள முட்டை, பால், மீன், சிக்கன், ஆரஞ்சு பழச்சாறு, உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டு வைட்டமின் டி, பற்றாக்குறையை தவிர்க்கவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.