Muharram Festival 2022
மொஹரம் பண்டிகை:
இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை, தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லீம் மக்களால், ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Muharram Festival 2022
ஷியா முஸ்லீம்கள் கி.பி 680 ஆஷுரா நாளில் கர்பாலா போரில் ஹஜ்ரத் அலியின் மகனும், முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை துக்க நாளாக மொஹரம் பண்டிகையை கடைப்பிடிக்கின்றனர். எனவே ஷியா முஸ்லிம்களுக்கு, இந்த தினத்தில் கொண்டாட்டங்கள் எதுவும் நடக்காது. அவர்களுக்கு இது, துக்கம் மற்றும் பிரார்த்தனை சார்ந்த ஒரு மாதம் ஆகும்.