Sleeping problem: படுத்ததும் தூக்கம் வரவில்லையா..? அப்படினா..! இனிமேல் இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்கள்..!

First Published Oct 6, 2022, 12:00 PM IST

Sleeping tips: சராசரியாக ஒரு மனிதன் படுத்ததில் இருந்து, 10 முதல் 20 நிமிடத்தில் தூங்குவதாக ஆய்வுகள் சொல்லப்படுகிறது. அதற்கு மேல் தூங்காமல் இருப்பவர்கள் ஒருவகையான அழுத்தத்தில் இருப்பதாக அறிந்து கொள்ளலாம். 

சராசரியாக ஒரு மனிதன் படுத்ததில் இருந்து, 10 முதல் 20 நிமிடத்தில் தூங்குவதாக ஆய்வுகள் சொல்லப்படுகிறது. அதற்கு மேல் தூங்காமல் இருப்பவர்கள் ஒருவகையான அழுத்தத்தில் இருப்பதாக அறிந்து கொள்ளலாம். அது உடலில் சோம்பலை உண்டாக்கி அடுத்த நாள் பொழுதை கடுமையாக பாதிக்கும்.

''அவன பாரு படுத்ததும் தூங்கி விட்டான் அவன் குடுத்துவச்சவன்'' என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். அது என்னவோ உண்மைதான். படுத்ததும் தூங்க வேண்டும் என்கின்ற ஆசையும், ஏக்கமும் அனைவருக்கும் இருக்கும். இதற்கு ஒரு சில டிரிக்ஸ் இருக்கிறது. இவற்றை நீங்கள் பின்பற்றினால் போதும் படுத்ததும் தூக்கம் வந்து சேரும். 

20 நிமிடங்களுக்கு மேல் ஒருவருக்கு தூக்கம் வரவில்லை என்றால், எழுந்து புத்தகம் படிக்கலாம். குளிக்கலாம், டீ குடிக்கலாம். யோக செய்யலாம், மெல்லிசை கேட்கலாம்.

தூக்கம் வரவில்லை என்றால் அந்த நேரம் மெல்லிசை பாட்டு கேட்கலாம். இது உங்களுக்கு நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும். 

 மேலும் படிக்க...எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட கூடாது...? மீறினால், வாஸ்துப்படி தீராத ஆரோக்கிய குறைபாடு வந்து சேருமாம்..

நீங்கள் புத்தகம் படிக்கும் போது மன அழுத்தம் குறைந்து, தூக்கம் நன்றாக வரும். 

தூக்கம் வரவில்லை என்றால், வெது வெதுப்பான நீரில் ஒரு குளியலை போடுங்கள். இது நல்ல உறக்கத்தை தந்து, சரும பாதுகாப்பையும் தரும். இதனால் பருக்கள், முக வறட்சி போன்றவை ஏற்படாது.

நீங்கள் தூங்க செல்லும் போது, படுக்கைக்கு அருகில் மொபைலை வைக்காமல், சற்று தூரமாக வைத்து தூங்கினால் நல்லது. முடிந்தவரை செல்போனை ஸ்விட் ஆப் செய்து விட்டு தூங்குவது நல்லது. 

அதேபோன்று, தூங்க செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை கணினி, மொபைல், தொலைக்காட்சி ஆகியவற்றை பார்ப்பதை தவிருங்கள். 
 

அதேபோன்று, மிக அருகிலான வெளிச்சத்தில் இருந்து கண்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு தூங்கினால் தான் கண்களுக்கு நல்லது.

 தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மூச்சுப்பயிற்சி, யோக போன்றவை செய்யலாம். 
 மேலும் படிக்க...எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட கூடாது...? மீறினால், வாஸ்துப்படி தீராத ஆரோக்கிய குறைபாடு வந்து சேருமாம்..

அளவிற்கு அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்ள கூடாது, மூளை நலனை பாதுகாத்துக் கொள்வதற்கு சத்தான உணவுகளை சாப்பிடுவதுடன், அவ்வபோது தண்ணீர் அருந்துவதும் அவசியமாகும். நம் மூளையை சோர்வடையச் செய்யும் விஷயங்களில் இருந்து அவ்வபோது கவனத்தை திசைதிருப்ப வேண்டும். 

 மேலும் படிக்க...எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட கூடாது...? மீறினால், வாஸ்துப்படி தீராத ஆரோக்கிய குறைபாடு வந்து சேருமாம்..

click me!