வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியலையா..? நிரந்தர தீர்வுக்கு இந்த 3 டிப்ஸ் பயன்படுத்தி பாருங்கள்..!

First Published Oct 6, 2022, 7:02 AM IST

Cockroaches at home: இரவில் வீட்டின் சமையம் அறையில் உலா வரும் கரப்பான் பூச்சியால், உங்களது உணவில் விஷம் மற்றும் தொற்று ஏற்படலாம். இதனை முற்றிலும் ஒழிக்க இந்த குறிப்பு பின்பற்றி பாருங்கள்.

cockroaches

கரப்பான் பூச்சிகள் பொதுவாக தண்ணீர் அதிகம் புழங்கும் இடத்தில் எப்போதும் இருக்கும். குறிப்பாக நம்முடைய வீடுகளில் கிச்சன், பாத்ரூம் போன்ற இடங்களில் அதிக அளவில் கரப்பான் பூச்சி பல்லி போன்றவை அதிக அளவில் உலா வந்து நமக்கு  தொல்லை கொடுக்கும். சில சமயங்களில் ஒருவேளை நீங்கள் சமையம் அறையினை சுத்தமாக வைத்திருக்க வில்லை என்றால், இரவில் கரப்பான் பூச்சிகள் சமையலறையில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் அருகிலும் வந்து சேரும்.

cockroaches

இதன் காரணமாக உங்களுக்கு ஆரோக்கியத்தில் குறைபாடு, ஒவ்வாமை போன்றவை ஏற்படும். கரப்பான் பூச்சியால், உங்களுக்கு தொற்று, உணவு விஷம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மூலம் கரப்பான் பூச்சிகளை முற்றிலும் ஒழிக்கலாம்.

மேலும் படிக்க...Left side sleeping: தூங்கும் போது ஏன் இடது பக்கம் தூங்குது நல்லது..? இதனால் உண்டாகும் பலன்கள் என்ன.?

cockroaches

பேக்கிங் சோடா:

இரவில் தூங்க செல்லும் போது பேக்கிங் சோடாவை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து உங்கள் சமையல் அறை மேடை, பாத்ரூம் போன்ற இடங்கள் முழுவதும் தூவி விட வேண்டும். பேக்கிங் சோடாவின் வாசனை கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது. பின்னர் 8 மணிநேரம் கழித்து பார்த்தால் கரப்பான் பூச்சிகள் முழுவதும் இறந்து கிடக்கும். பின்னர், காலையில் அடுப்பை கழுவி விட்டு சமையம் செய்ய வேண்டும். 

போரிக் அமிலத்தைப் பயன்படுத்துங்கள்
 
கரப்பான் பூச்சி போரிக் அமிலத்தைக் குடித்தால் அது இறந்துவிடும். பாத்ரூம்  வடிகால் மற்றும் சமையலறை தொட்டியின் அருகே போரிக் பவுடரை தூவுவதன் மூலமும் கரப்பான் பூச்சிகள் ஒழியும். இன்னும், 6 மாதத்திற்கு கரப்பான் பூச்சிகள் எட்டி கூட பார்க்காது.

மேலும் படிக்க...Left side sleeping: தூங்கும் போது ஏன் இடது பக்கம் தூங்குது நல்லது..? இதனால் உண்டாகும் பலன்கள் என்ன.?

புதினா தண்ணீர்

கரப்பான் பூச்சிகளுக்கு ஆபத்தானது புதினா தண்ணீர். இதனைப் பயன்படுத்தினால், வீட்டைச் சுற்றி கரப்பான் பூச்சிகள் வராது. உப்பு நீர் மற்றும் புதினா கலவையை ஒரு ஸ்ப்ரேயாக தயார் செய்து, கரப்பான் பூச்சிகள் அடிக்கடி காணப்படும் இடங்களில் தெளிக்கவும்.

மேலும் படிக்க...Left side sleeping: தூங்கும் போது ஏன் இடது பக்கம் தூங்குது நல்லது..? இதனால் உண்டாகும் பலன்கள் என்ன.?

click me!