அக்டோபர் 2022 சூரியன் பெயர்ச்சி: இந்த அக்டோபர் மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கன்னியில் புதன் பெயர்ச்சி நடைபெற்றது. இது, பல ராசிக்காரர்களுக்கு சுப பலனையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் உண்டாக்கும். அதன்படி, வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி 2022 அன்று சூரிய பகவான் துலாம் ராசிக்குள் நுழைகிறார். சூரிய பகவான், புதன் தேவனுக்கு சொந்தமான கன்னி ராசியை விட்டு துலாம் ராசிக்குள் நுழைவார். சூரிய பகவானின் இந்த பெயர்ச்சியினால் குறிப்பிட்ட ராசிக்கு சுப பலன்கள் தருகிறது.