ஜோதிடத்தில். கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிகளுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலனும் கிடைக்கும். ஒரு நபரின் ஜாதகம் கிரகங்களின் இயக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சனிபகவானின் அருள் ஒருவருக்கு கிடைப்பது சிறப்பாக கருதப்படுகின்றது. அதன்படி, அக்டோபர் 22ம் தேதி 2022 ஆம் ஆண்டு நிகழும் சனிகிரகத்தின் சஞ்சாரம் காரணமாக, சிலர் இதுவரை அனுபவித்து வந்த ஏழரை நாட்டு சனியின் தாக்கம் மற்றும் சனி தசையின் தாக்கத்திலிருந்து நிவாரணம் பெறலாம். தற்போத ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி கடலில் நீந்தும் ராசிகள் யார் என்பதை பார்ப்போம்.