எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட கூடாது...? மீறினால், வாஸ்துப்படி தீராத ஆரோக்கிய குறைபாடு வந்து சேருமாம்..

Published : Oct 06, 2022, 10:09 AM ISTUpdated : Oct 06, 2022, 10:16 AM IST

Sapida vendiya thisai in tamil: நாம் தினமும் உணவு உண்பதற்கு இந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் வந்து சேருமாம். ஆகவே, நாம் எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதை பார்ப்போம்.

PREV
16
 எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட கூடாது...? மீறினால், வாஸ்துப்படி தீராத ஆரோக்கிய குறைபாடு வந்து சேருமாம்..

இன்றைய காலத்தில், மேற்கத்திய உணவு கலாச்சாரம் நம்மில் அதிகரித்து காணப்படுகிறது. அதனால், சத்து நிறைந்த உணவு வகைகளை நாம் மறந்து வருகிறோம். அதுமட்டுமின்று, நேரம், காலம் இல்லாமல் ஆரோக்கியம் இல்லாத உணவு, நேரம் தவறிய உணவு முறையாலும் நம் ஆரோக்கியத்தை கெடுத்து விடுகிறது. நம்முடைய முன்னோர்கள் எல்லாம் நேரம், காலம், அமரும் முறை போன்றவற்றை முறையாக கடைபிடிப்பவர்கள். அதனால், தான் அவர்களின் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.  

மேலும் படிக்க..Left side sleeping: தூங்கும் போது ஏன் இடது பக்கம் தூங்குது நல்லது..? இதனால் உண்டாகும் பலன்கள் என்ன.?

26

அதேபோன்று, எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமான இருக்கும் என்பதையும், எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட கூடாது, மீறினால் அஜீரண கோளாறுகள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெடும் என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

36

ஒருவர் சாப்பிடும் போது, கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும்  நல்லது. அப்போதுதான் உடலில் ஜீரண சக்தி சீராக இருக்கும். நீங்கள் எப்போதும், கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து சூரிய பகவானுக்கு ஒரு நன்றியை தெரிவித்து விட்டு சாப்பிடுவது  நல்லது. சாப்பிடும் போது நிச்சயமாக பக்கத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க..Left side sleeping: தூங்கும் போது ஏன் இடது பக்கம் தூங்குது நல்லது..? இதனால் உண்டாகும் பலன்கள் என்ன.?

அதேபோன்று, தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிடுவதும் உடலுக்கு நன்மை தரக்கூடிய விஷயம் ஆகும். ஏனெனில், இந்த திசை பெரும்பாலும் நம்முடைய முன்னோர்களுக்கு உரிய திசையாக சொல்லப்பட்டுள்ளது.  

46

ஆனால், ஒருபோதும் மேற்கு திசை பார்த்தவாறு அமர்ந்து சாப்பிடக்கூடாது. மேற்கு திசை என்பது மற்ற விஷயங்களுக்கு எல்லாம் நன்மை தரக்கூடிய திசையாக இருந்தாலும், உணவு சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு மேற்கு திசை சரியான திசை அல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே, கூடுமானவரை மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

56

அதுமட்டுமின்று, உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் போது மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் பகை உண்டாகும் என்ற ஒரு கருத்தும் உண்டு. அடுத்ததாக, வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடும் போது சரியான முறையில் நமக்கு ஜீரணம் ஆகாது. இதனால் நமக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் பல்வேறு குறைபாடுகள்வந்து சேரும். ஆகவே வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

66

அதேபோன்று, நீங்கள் சாப்பிட தொடங்குவதற்கு முன்பு நமக்கு சாப்பாடு கொடுத்த இறைவனுக்கும், பசியாற்றும் அன்னபூரணிக்கும்  ஒரு நன்றியை தெரிவித்து விட்டு, சாப்பாட்டை உண்டு வரும்போது நமக்கு வறுமை என்ற நிலை வராது. அதேபோல தினமும் நீங்கள் சாப்பிடக்கூடிய சாப்பாட்டில் இருந்து ஒரு கைப்பிடி சாதத்தை காக்கை போன்ற ஏதாவது ஒரு வாயில்லா ஜீவன்களுக்கு கொடுக்கும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க..Left side sleeping: தூங்கும் போது ஏன் இடது பக்கம் தூங்குது நல்லது..? இதனால் உண்டாகும் பலன்கள் என்ன.?

Read more Photos on
click me!

Recommended Stories