வெங்காயம் ஈரப்பதமாக இருந்தாலோ அல்லது குளிர்காலத்தில் அது முளைவிடத் தொடங்கும். முளைத்த வெங்காயத்தை பெரும்பாலும் நாம் குப்பையில் தூக்கி எறிந்து விடுவோம். சிலரோ முளைத்த வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் அது பாதுகாப்பானதா? உண்மை என்னவென்று இந்த பதிவில் காணலாம்.
27
முளைத்த வெங்காயம் என்றால் என்ன?
வெங்காயத்தின் முனைப் பகுதியில் பச்சை நிறத்தில் தளிர் வெளியேவந்திருக்கும். அதுதான் முளைத்த வெங்காயம். முளைத்த வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது தான். ஆனாலும் அதன் சுவை, மனம் சிலருக்கு பிடிக்காது. இருந்தபோதிலும் சிலர் முளைத்த வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
37
ஊட்டச்சத்துள்ளதா?
முளைத்த வெங்காயத்தின் சுவை, மனம் மட்டுமல்ல அதன் ஊட்டச்சத்தும் மாறுபடும். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆக்சிஜனேற்றிகள் மற்றும் பைடோகெமிக்கல்கள் முளைத்த வெங்காயத்தில் நிறைந்திருக்கும். வெங்காயத்தில் இருக்கும் தாதுக்கள் அப்படியே இருக்கும். இருந்தபோதிலும் முளைத்த வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தும் முன் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவை..
புதிய வெங்காயத்தை விட முளைத்த வெங்காயத்தின் மனம் மற்றும் சுவை வேறுபட்டிருக்கும். சிலருக்கு இதன் சுவை பிடிக்காது.
57
முளைத்த பகுதியை நீக்கவும் :
நீங்கள் சமையலுக்கு முளைத்த வெங்காயத்தை பயன்படுத்த நினைத்தால் அதை சமைப்பதற்கு முன் அதன் முனைகளை அகற்றி விடுங்கள். வேண்டுமானால் முளைகட்டிய பகுதியையும் கூட சமையலுக்கு சேர்க்கலாம். அது ஆபத்தானது அல்ல.
67
கெட்டுப் போனதை தவிர்க்கவும்!
வெங்காயம் வெறுமனே முளைகட்டி இருந்தால் அது சமையலுக்கு பயன்படுத்துவது எந்தவித ஆபத்தும் இல்லை. ஆனால் அது அழுகி இருந்தாலோ அல்லது துர்நாற்றம் வீசினாலோ அதை குப்பையில் போடுவது தான் நல்லது.
77
வெங்காயம் முளைகட்டுவது தவிர்ப்பது எப்படி?
வெங்காயம் முளைப்பதைத் தவிர்க்க வெங்காயத்தை எப்போதுமே வெப்பமான பகுதிகளில் சேமித்து வைக்கவும். மேலும் நல்ல காற்றோட்டம் இருந்த பகுதிகளில் வெங்காயத்தை வைக்கவும். வெங்காயத்தை பிரிட்ஜில் ஒருபோதும் வைக்காதீர்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.