
நீங்கள் எப்போதாவது காலணிகள் இல்லாமல் வெறுங்காலில் நடக்க முயற்சித்திருக்கிறீர்களா? இல்லை வெறுங்காலில் நடந்திருக்கிறீர்களா? வெறுங்காலில் நடப்பதால் உங்கள் இதய ஆரோக்கியம், இரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கான பல நன்மைகளையும் கொண்டுள்ளது. கால் வலியை குறைப்பதுடன் வெறுங்காலுடன் நடப்பது அல்லது வேலை செய்வது வலி மற்றும் வீக்கம் குறைதல், தூக்கம் மேம்படுதல், நோய் எதிர்ப்பு சக்தி, மன அழுத்தம் குறைதல் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துதல் போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
வெறுங்காலுடன் நடப்பது பாதத்தின் நிலையை சிறப்பாகக் கட்டுப்படுத்துவதுடன் உங்கள் கால்களால் தரையில் குதிகால் தாக்கும் அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும்கால்களின் தசைகள் மற்றும் தசைநார்கள் வலுப்படுத்தவும் உதவும். நீங்கள் வெறுங்காலுடன் நடக்கத் தொடங்கும் போது, அது உங்கள் கணுக்கால் மற்றும் கால்களின் இயக்க வரம்பை மேம்படுத்துகிறது மற்றும் கணுக்கால், முழங்கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றில் அழுத்தத்தை குறைக்கும்.
இதற்கு முன் வெறுங்காலுடன் நடக்க முயற்சி செய்யாத நபர்கள், முதலில் சில நிமிடங்களுக்கு பயிற்சி செய்ய வேண்டும். அதன்பின்னர் படிப்படியாக வெறுங்காலில் நடக்கலாம். சரி, வெறுங்காலுடன் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
வெறுங்காலில் நடப்பதால் சர்க்காடியன் ரிதம் மேம்படுகிறது. இது, நமது உள் 24 மணிநேர உயிரியல் சுழற்சியை மேம்படுத்துகிறது, இது நாள் முழுவதும் நமது உடல், மன மற்றும் நடத்தை மாற்றங்கள் மற்றும் தூக்கம், ஹார்மோன்கள், உடல் வெப்பநிலை, உணர்ச்சிகள் போன்ற முக்கியமான விஷயங்களைக் கவனித்துக்கொள்கிறது.
வெறுங்காலுடன் நடப்பதன் மூலம், பெரிய அளவிலான காலணிகளை அணிவதால் ஏற்படும் நக பாதங்கள் போன்ற பாதங்களில் ஏற்படும் குறைபாடுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
காலணிகள் இல்லாமல் நடப்பது, கால் வளைவை மேம்படுத்தி, கால்கள் மற்றும் கால்களின் தசைகள் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றை வலுப்படுத்துவதன் மூலம் கால் இயக்கவியலை மேம்படுத்த உதவும். இது கணுக்கால் மற்றும் கால்களின் இயல்பான இயக்கத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் கணுக்கால், முழங்கால் மற்றும் இடுப்பு மீது அழுத்தத்தை குறைக்கிறது.
புல், மணல், மண் மற்றும் தரை போன்ற கடினமான மேற்பரப்பு போன்ற பல்வேறு பரப்புகளில் வெறுங்காலுடன் நடப்பது நமது உணர்வு ரீதியான வளர்ச்சியை மேலும் மேம்படுத்தலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வெறுங்காலுடன் நடப்பது தன்னியக்க நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்தும் பாராசிம்பேடிக் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை மேம்படுத்த உதவுகிறது என்றும் சில ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.
வெறுங்காலுடன் நடக்கத் தொடங்குவதற்கான டிப்ஸ்
சிறிய பயிற்சிகளுடன் தொடங்குங்கள்
நமது பாதத்தில் 26 எலும்புகள், 33 மூட்டுகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தசைகள், தசைநார்கள் மற்றும் தசைநாண்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு சிக்கலான அமைப்பாகும். சிறிய உடற்பயிற்சிகளுடன் அவற்றை வலுப்படுத்தத் தொடங்குவது முக்கியம். உங்கள் கால்களுக்குக் கீழே ஒரு சிறிய துண்டை வைத்து, உங்கள் கால்விரல்களால் துண்டைப் பிடிக்க முயற்சிக்கவும்.
வீட்டிலிருந்து தொடங்குங்கள்
முதலில் காலணிகள் இல்லாமல் வீட்டிற்குள் நடக்கத் தொடங்குங்கள். வீட்டிற்குள் வெறுங்காலில் நடப்பதால் உங்கள் கால்களில் உள்ள கால்சஸ் தடிமனை மேம்படுத்தும், இது உங்கள் கால்களை வெளியே நடக்கத் தயாராக வைக்கும். தடிமனான கால்சஸ் கால்களின் உணர்திறனை பாதிக்காது என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன உலர்ந்த மேற்பரப்புகளுக்கு மேல் ஈரமான மேற்பரப்புகளைத் தேர்ந்தெடுக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஈரமான புல் மீது நடக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சுத்தமான பகுதியில் நடக்க வேண்டும்
நீங்கள் நடக்க சுத்தமான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும், ஏனெனில் அது உங்கள் உள்ளங்கால்களில் காயம் அல்லது தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பாக இருக்கக்கூடாது. வெளியில் நடந்த பிறகு, உங்கள் கால்களில் ஏதேனும் காயம் அல்லது அழுக்கு இருக்கிறதா என்று சோதிக்கவும். வெறுங்காலுடன் வெளியில் நடந்த பிறகு உங்கள் கால்களை நன்கு கழுவுங்கள்.
உங்களுக்கு ஏதேனும் காயங்கள் இருந்தால் அல்லது உங்களுக்கு உடல்நலக் குறைவு இருந்தால், வெறுங்காலி நடக்க தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும். நீங்கள் ஏற்கனவே உள்ளங்கால் அழற்சி, தட்டையான பாதங்கள் அல்லது உங்கள் கால்களின் பலவீனமான தசைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், வெறுங்காலுடன் நடக்க உங்களை தயார்படுத்த உங்கள் பிசியோதெரபிஸ்ட்டை அணுகவும்.