Benefits of Early Morning Walks In Tamil
பெரும்பாலானோர் அதிகாலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் விஷயம் என்னவென்றால், வாக்கிங் செல்வது தான். ஆனால் பலர் இதை ஒரு உடற்பயிற்சியாக கூட கருதுவதில்லை. ஆனால் உண்மையில், வாக்கிங் என்பது உடலுக்கு மிகவும் பயனுள்ள உடற்பயிற்சிகளில் ஒன்றாகும் தெரியுமா?
Benefits of Early Morning Walks In Tamil
நடைபயிற்சிக்கு பிற உடல் பயிற்சியை போல அதிக முயற்சி ஏதும் செய்ய தேவையில்லை. நடைபயிற்சி முழு உடலையும் செயல்படுத்த தூண்டுகிறது. மேலும் இது உடலில் இருக்கும் பல கலோரிகளை எரிக்க பெரிதும் உதவுகிறது. அந்த வகையில் அதிகாலை நடைபயிற்சி செய்வதால் உடலுக்கு எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: பின்னோக்கி நடந்தால் 'முழங்கால் வலி' குணமாகிடும்னு சொல்றது உண்மையா?
Benefits of Early Morning Walks In Tamil
அதிகாலை நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
ஆற்றல் அளவை அதிகரிக்கும்
அதிகாலை நடைபயிற்சி உங்களை விரைவாகவே சோர்வடையச் செய்யும் ஒரு உடற்பயிற்சியாகும். ஆனால் இதுதான் உங்களது உடலுக்கு ஆற்றல் அளவை அதிகரிக்க செய்ய உதவுகிறது தெரியுமா? இதற்கு காரணம் தொடர்ச்சியான நடைபயிற்சி செய்வதால் செல்கள் வழக்கத்தை விட அதிக ஆற்றலை உற்பத்தி செய்கின்றது. இதனால் உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் ஆற்றலின் அளவும் அதிகரிக்கும். இதற்கு நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பூங்கா அல்லது வீட்டிற்கு வெளியே குறைந்தது 20-30 நிமிடங்கள் நடக்க வேண்டும். மேலும் படிக்கட்டுகளில் 10 நிமிடம் நடந்தால் நன்மைகள் பல கிடைக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் வாக்கிங் போக முடியலையா? அப்ப வீட்ல இருந்து இந்த 4 எக்சசைஸ் பண்ணுங்க!
Benefits of Early Morning Walks In Tamil
நோய்கள் வராமல் தடுக்கப்படும்
அதிகாலை நடைபயிற்சி வழக்கமான உடற்பயிற்சியின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. மேலும் இது உங்களை ஆரோக்கியமாக இருக்க வைக்கிறது. நீங்கள் தினமும் அதிகாலை குறைந்தது 30 நிமிடங்கள் நடந்தால், எந்த நோய்களும் வராமல் தடுக்கப்படும். அதுபோல ஒரு நாளைக்கு குறைந்தது 150 முதல் 300 நிமிடங்கள் நடந்தால் முழு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
எடையை குறைக்க உதவும்
தினமும் அதிகாலை நீங்கள் சுமார் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தால் உங்களது உடலில் சுமார் 400 கலோரிகளை குறைக்க உதவுகிறது. ஆனால், இது நடையின் வேகம் மற்றும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தை பொறுத்தது.
Benefits of Early Morning Walks In Tamil
உடல் பிரச்சினைகளை தடுக்கும்
அதிகாலை நடைபயிற்சி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கும். இதனால் பல்வேறு நோய் தொற்றுகள் தடுக்கப்படுகிறது. குறிப்பாக அதிகாலை நடைபயிற்சி ஆரோக்கியமான உடற்பயிற்சி என்பதால் இதனால் சர்க்கரை நோய் முதல் இதய நோய் அபாயத்தை பெருமளவும் குறைக்க உதவுகிறது. இதற்கு தினமும் 30 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும். இது தவிர அதிகாலை நடைபயிற்சி சுவாச ஆரோக்கிய மேம்படுத்தவும், புற்றுநோய் அபாயத்திலிருந்தும் உங்களை பாதுகாக்கும்.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
அதிகாலை நடைபயிற்சி உங்களது உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எப்படியெனில் நடைபயிற்சி முழு உடல் உறுப்புகளையும் இயங்க வைக்கிறது. இதனால் உடலுக்கு தேவையான ஆற்றின் அளவு அதிகரித்து, அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்ய வழி வருகிறது. இதன் காரணமாக உங்களது மனநிலை மேம்படுத்தப்படுகிறது. இதனால் பதட்டம் மன அழுத்தம் சோர்வு ஆகியவை குறையும். இதற்கு நீங்கள் குறைந்தது 20 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும்.