
குழந்தை வளர்ப்பில் அம்மாக்களின் பங்கு ரொம்பவே முக்கியம். சொல்லப்போனால் அதுதான் அவர்களது கடமை. தாய் இல்லாமல் குழந்தை வளர்ப்பு முழுமை அடையாது. ஏனெனில் தாயின் அன்பு குழந்தையின் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு ரொம்பவே முக்கியம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தை வளர்பில் தாயின் பங்கு மிகவும் முக்கியமானது தான். ஆனால் குழந்தை வளர்ப்பில் அம்மாக்கள் செய்யும் பெரிய தவறுகள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கிறது. அது என்னென்ன தவறுகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தை வளர்ப்பில் அம்மாக்கள் செய்யும் சில தவறுகள் :
1. அதிக அக்கறை
குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் தங்கள் குழந்தை மீது அக்கறையாக இருப்பது நல்லது தான். ஆனால் அதை அளவுக்கு அதிகமாக வைப்பது தான் தவறு. அதாவது, பல தாய்மார்கள் அக்கறை என்ற பெயரில் குழந்தைகளின் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிடுவது, அவர்களது எண்ணங்கள் மற்றும் முடிவுகளின் மீது கட்டுப்பாடுகள் வைப்பது போன்றவையாகும். இவை குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும்.
2. உணர்வுகளை புறக்கணிப்பது
சில அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் உணர்வுகளை விட அவர்களது கல்வி மற்றும் உடல் நலத்திற்கு தான் முன்னுரிமை அதிகம் கொடுப்பார்கள். ஆனால், அது தவறு. பொதுவாகவே, குழந்தைகள் தங்களது உணர்வுகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவார்கள். எனவே, நீங்கள் உங்களது குழந்தையின் கவலைகள் மற்றும் உணர்வுகளை கேட்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். இல்லையெனில், அவர்களது உணர்ச்சி வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும்.
3. மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுதல்
நீங்கள் உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசும் நபர் என்றால், உடனே அந்தப் பழக்கத்தை நிறுத்துங்கள். இது உங்கள் குழந்தைக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் அவர்களின் சுயமரியாதை எதிர்மறையாக பாதிக்கப்படக்கூடும். ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் வளரும் போது தங்களது சொந்த பாதையில் செல்ல விரும்புவார்கள். எனவே நீங்கள் அதை அடையாளம் கண்டு அவர்களை பாராட்ட முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் ஒப்பிட்டு பேசாதீர்கள்.
4. கட்டுப்பாடுகள் இல்லாதது
சில தாய்மார்கள் குழந்தையை கட்டுப்பாடுகள் இல்லாமல், அளவுக்கு அதிகமாக செல்லும் கொடுத்து வளர்ப்பார்கள். இப்படி இருப்பதும் தவறு. குழந்தை வளர்ப்பில் ஒரு குறிப்பிட்ட எல்லை விதிகள், எல்லைகள் அமைக்க வேண்டும். மேலும் குழந்தைகள் கண்டிப்பாக அதை பின்பற்றுமாறு சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: குழந்தைங்க சூப்பரா படிக்கனுமா? பெற்றோர் 'இப்படி' பண்ணா பிள்ளைங்க தன்னால படிப்பாங்க!!
5. கட்டுப்படுத்துதல்
பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் தங்களது கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். ஆனால் இது தவறு. ஏனெனில் ஒரு குழந்தையின் தனிப்பட்ட வளர்ச்சியானது அவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து தான் கற்றுக்கொள்ள முடியும். எனவே குழந்தைகளை தங்களது கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைக்கக் கூடாது.
6. அதிக அழுத்தம் கொடுப்பது
தங்களது குழந்தை எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தாய்மார்கள் அவர்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். இது அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கும். மேலும் உங்களது குழந்தை எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க வேண்டாம். முக்கியமாக, உங்கள் குழந்தை எதை விரும்புகிறார்களோ அதை செய்ய அவர்களை ஊக்குவிக்கவும்.
இதையும் படிங்க: பிள்ளைகள் உங்கள் பேச்சை தட்டாமல் கேட்கனுமா? பெற்றோருக்கான பெஸ்ட் டிப்ஸ்!!
7. நேரம் கொடுக்காமல் இருப்பது
பல தாய்மார்கள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளிடம் சரியான நேரம் கொடுத்து கூட பேச முடிவதில்லை. ஆனால் இது குழந்தை மீது எதிர்மறையாக பாதிக்கும் மற்றும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணர்வார்கள். எனவே அம்மாக்களை முடிந்த வரை உங்கள் குழந்தையிடம் ஒரு மணி நேரமாவது ஒதுக்குங்கள். அவர்களுக்கு முன்னுரை கொடுக்கிறீர்கள் என்பதை இதன் மூலம் காட்டுங்கள்.
8. குழந்தையின் வார்த்தையை மதியுங்கள்
பல தாய்மார்கள் தங்கள் குழந்தையின் வார்த்தையை மதிப்பதில்லை. நீங்கள் இப்படி செய்வதன் மூலம் அவர்களது கருத்து பொருட்டல்லை என்று அவர்கள் உணர ஆரம்பித்து விடுவார்கள். இதனால் அவர்களது மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே அவர்களது வார்த்தைகளையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.