மீன் சாப்பிடும் போது 'இந்த' உணவுகளை மட்டும் தவிர்க்கனும்!! மீறினால் சேதாரம் தான்!!

First Published | Nov 4, 2024, 12:44 PM IST

Bad Food Combinations With Fish : மீன் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. ஆனால் அவற்றுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது தெரியுமா? மீறி சாப்பிட்டால் நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும்.

Bad Food Combinations With Fish In Tamil

மீன் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றாகும். மீனில் ப்ரை, குழம்பு, ஸ்னாக்ஸ் என பல வகையான ரெசிபிகள் செய்து சாப்பிடலாம். மீனில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை வாரி வழங்குகிறது. இதனால் தான் இது உலகின் மிகவும் சத்தான உணவுகளில் ஒன்று என்று சொல்லப்படுகிறது.

மீனில் இருக்கும் இரும்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை உடலுக்கு ரொம்பவே நல்லது. மீன் எடையை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியம் மற்றும் மூளை திறனை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது. 

Bad Food Combinations With Fish In Tamil

இப்படி பல்வேறு நன்மைகளை மீன் நமக்கு வழங்கினாலும் மீன் சாப்பிடும்போது அல்லது மீன் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக மிகவும் மோசமான தீங்கு விளைவிக்கும் தெரியுமா? மீறி சாப்பிட்டால் உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இந்த பதிவில் மீன் சாப்பிடும்போது அல்லது மீன் சாப்பிட்ட பிறகு எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது, அப்படி சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சினைகள் வரும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  மீன் எல்லோருக்கும் நல்லதல்ல.. இந்த '7' மீன்களை 'கர்ப்பிணிகள்' சாப்பிடக் கூடாது!! 

Tap to resize

Bad Food Combinations With Fish In Tamil

மீனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் :

பால் : மீனுடன் பால் தயிர் அல்லது பிறப்பால் பொருட்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள், வீக்கம், வயிற்று வலி, தோல் நோய் தொற்றுகள் மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

வறுத்த உணவுகள்: அதிக பதப்படுத்தப்பட்ட அல்லது வறுத்த உணவுகளை ஒருபோதும் மீனுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம். ஒருவேளை அப்படி சாப்பிட்டால் மீனின் தரம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறையும். இது தவிர வறுத்த உணவுகளில் அதிக அளவு நிறைவுற்ற மற்றும் கொழுப்புகள் இருப்பதால் இதை மீனுடன் சேர்த்து சாப்பிடும் போது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும்.

Bad Food Combinations With Fish In Tamil

சிட்ரஸ் பழங்கள் : மீனுடன் சிட்ரஸ் பழங்களை ஒன்றாக சேர்த்து சாப்பிட வேண்டாம். ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் இருக்கும் அமிலங்கள் மீனில் உள்ள புரதங்களுடன் வினைபுரிந்து உடலில் பலவித பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

காரமான உணவுகள் : மீன் சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட பிறகு காரமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். மீறி சாப்பிட்டால் வயிறு மற்றும் குடல் அசெளகரியம் ஏற்படும். இது தவிர வீக்கமும் ஏற்படும்.

இதையும் படிங்க : மீனோட சுவை அடிக்கடி சாப்பிட தூண்டும்.. ஆனா 'இந்த' நேரத்துல சாப்பிட்டா ஆபத்து மட்டும் தான்!!

Bad Food Combinations With Fish In Tamil

இனிப்புகள் : மீன் சாப்பிட்ட பிறகு பாலில் செய்யப்பட்ட இனிப்புகளை எக்காரணம் கொண்டும் சாப்பிட வேண்டாம். அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். ஆயுர்வேதத்தின் படி, மீனுடன் பால் பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் தோல் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்க செய்யும்.

ஐஸ்கிரீம் : மீன் சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சருமம் மற்றும் வயிற்று தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

உருளைக்கிழங்கு : மீனுடன் உருளைக்கிழங்கு போன்ற கனமான மற்றும் மாவு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம். இதனால் உடல் உடலுக்கு கூடுதல் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் கிடைக்கும் மற்றும் செரிமான அமைப்பை மெதுவாக்கும்.

Latest Videos

click me!