
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் தங்கள் முகத்தை பராமரிப்பதில் மட்டுமே அதிக அக்கறை காட்டுவார்களே தவிர, கழுத்தை பராமரிப்பதில் மறந்து விடுவார்கள். ஆனால் இப்படி நீண்ட நாள் செய்து வந்தால் வெயிலின் தாக்கம் மற்றும் அழுக்கு படிந்து கழுத்து கருப்பாக மாற தொடங்குகிறது மற்றும் பார்ப்பதற்கும் அசிங்கமாகவும் இருக்கும். இதனால் சில சமயங்களில் நீங்கள் சங்கடமாக கூட உணரலாம். அந்த வகையில் உங்களது கழுத்து கருமையை போக்க விரும்பினால், பின்பற்றினால் போதும் அவை நிச்சயம் உங்களுக்கு உதவும்.
இதையும் படிங்க: கழுத்தில் Perfume யூஸ் பண்ணா கழுத்து கருப்பா மாறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
கழுத்தில் உள்ள கருமையை நீக்க டிப்ஸ்:
தயிர் மற்றும் எலுமிச்சை சாறு
கருப்பாக இருக்கும் கழுத்தை சுத்தம் செய்ய தயிர் மற்றும் எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம். இதற்கு தயிரில் எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலந்து, அதை கழுத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு தண்ணீரால் கழுவுங்கள். இதை நீங்கள் வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருமை கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும்.
பப்பாளி மற்றும் தயிர்
கழுத்தில் படிந்திருக்கும் அழுக்கை சுத்தம் செய்ய ஒரு கிண்ணத்தில் பப்பாளியின் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு அதில் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து அவற்றின் நன்கு கலந்து கழுத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பிறகு 5 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு தண்ணீரால் நன்கு கழுவவும். இதை நீங்கள் வாரத்திற்கு 3 முறை செய்யலாம்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லை தினமும் கழுத்தில் தடவி வந்தால் கழுத்தில் இருக்கும் கருமை கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.
உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கு சாற்றை கழுத்தில் தடவி வந்தால் விரைவில் கழுத்தில் இருக்கும் கருமை நீங்கும். இதற்கு உருளைக்கிழங்கு சாற்றை 15 நிமிடம் கழுத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து பிறகு தண்ணீரில் கழுவவும். வேண்டுமானால் உருளைக்கிழங்கு சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து பயன்படுத்தலாம். நல்ல பலனை காண்பீர்கள்.
கடலை மாவு மற்றும் மஞ்சள்
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மஞ்சள் மற்றும் தயிர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை நன்கு கலந்து அதை கழுத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். இதை நீங்கள் வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருமை நீங்கும்.
தேன் மற்றும் எலுமிச்சை
இதற்கு ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறில் தேன் கலந்து அந்த பேஸ்ட்டை மெதுவாக கழுத்தில் தடவி, 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு தண்ணீரில் கழுவும். இதை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருமை மறையும்.
மஞ்சள் மற்றும் பால்
கழுத்தில் இருக்கும் கருமையை போக்க ஒரு ஸ்பூன் பால் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்கு கலந்து கழுத்தில் தடவி, காய வைத்து விடவும். பின்னர் 15 நிமிடம் கழித்து ஸ்கிரிப் செய்து கழுவும். இதை நீங்கள் ஏழு நாள் பயன்படுத்தி வந்தால் உங்கள் கழுத்தில் இருக்கும் கருமை நீங்கும்.
இதையும் படிங்க: கழுத்து வலியால் அவஸ்தையா? அப்ப இந்த '5' ஆயில்ல ஒன்னு யூஸ் பண்ணுங்க..!