
மலையாள திரை உலகைச் சேர்ந்த நடிகை நயன்தாரா, தமிழில் 'ஐயா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தன்னுடைய முதல் படத்தில் குண்டாக கொழுக்கு மொழுக்கு என பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல் எதார்த்தமான லுக்கில் இருந்த நயன், தன்னுடைய இரண்டாவது படமான 'சந்திரமுகி' படத்தில் மளமளவென எடையை குறைத்து துர்கா என்கிற கேரக்டராகவே மாறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
சினிமாவில் நடிக்க துவங்கிய போது கவர்ச்சி காட்டுவதற்கு தயக்கம் காட்டிய நயன்தாரா, வல்லவன், பில்லா, ஈ, வில்லு போன்ற படங்களில் அளவுக்கு அதிகமான கவர்ச்சியை வாரி இறைத்தார். குறிப்பாக தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்தார்.
தன்னுடைய திரைப்படத்திற்கு ஏற்ற போல், எடையை கூட்டுவது குறைப்பது என மேஜிக் செய்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவின், ஒர்க்கவுட் புகைப்படங்கள் இதுவரை வெளியானதே இல்லை என்றாலும், இவங்க இளமைக்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வதில் பலருக்கு ஆர்வம் உண்டு.
ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாகவே, நயன்தாரா சில மாதங்களுக்கு முன் தன்னுடைய டயட் மற்றும் பிட்னஸை பற்றி இன்ஸ்டாகிராமில் நீண்ட குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில் நயன்தாரா எப்படி என்ன தான் சீக்ரெட்டை பகிர்ந்திருந்தார் என்பதை பார்க்கலாம்.
நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தாவை விட இளையவர் சோபிதா.! அடேங்கப்பா இத்தனை வயசு வித்தியாசமா?
அதில் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் பின்பற்றும் உணவுப் பழக்கங்களை விட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு தேவை என்பதை தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் - நடிகைகள் தங்களின் ஒவ்வொரு படத்திற்கும் அதற்க்கு ஏற்றாப்போல் தோற்றத்தை மாற்ற வேண்டியது அவசியமாக இருக்கும் நிலையில், அதற்க்கு ஏற்றப் போல், அவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவுகளின் கலோரிகளை கூட எண்ணி எண்ணி... குறைவான உணவுகளை தான் எடுத்து கொள்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டுள்ள நயன்தாரா. இதில் இருந்து தான் எப்படி வித்தியாசப்படுகிறேன் என்பதையும் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில், உடல் எடையை கருத்தில் கொண்டு, உணவுகளை குறைவாக எடுத்து கொண்டாடும்... ஒருவரின் மகிழ்ச்சிக்கு அவர்கள் நல்ல உணவை சாப்பிட வேண்டும் என்பது மிகவும் அவசியம். எனவே டயட் என்கிற பெயரில் விருப்பம் இல்லாதா பிடிக்காத உணவுகளை எடுத்து கொள்வது இல்லை. முதலில் நானும் இப்படித்தான் நினைத்தேன் ஆனால் என்னுடைய அந்த எண்ணத்தை மாற்றியவர் என்னுடை ஊட்டச்சத்து நிபுணர் தான்.
அவரின் உதவியால் நான் இப்போது எந்தவித குற்ற உணர்வு இல்லாமல், எனக்கு பிடித்த உணவுகளை, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத உணவுகளை எடுத்து கொள்கிறேன். அவரை சந்தித்ததற்கு பின் நான் உணவை பார்க்கும் விஹமே மாறிவிட்டது. ஆரோக்கியமான உணவுகள் மூலம் சிறந்த மகிழ்ச்சியை உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாம் சாப்பிடும் உணவு, நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நல் வாழ்க்கைக்கும் வழி வாக்குகிறது என்பதை நம்புங்கள். இந்த பதிவை நான் போடுவதன் மூலம் நீங்களும் ஆரோக்கியமான வாழ்க்கையை கடைபிடிப்பீர்கள் என்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஊக்குவிக்கப்படுவீர்கள் என நம்புகிறேன். உங்கள் தட்டில் வைக்கப்படும் உணவுகள் தான் உங்களின் வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கிறது என நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தாவை விட இளையவர் சோபிதா.! அடேங்கப்பா இத்தனை வயசு வித்தியாசமா?
இதில் இருந்து ஒருவரின் டயட் மற்றும் ஃபிட்னசுக்கு அவர்களின் வாழ்க்கை முறை, உடல் பயிற்சியை தாண்டி ஆரோக்கியமான உணவுகள் தான் வழிவகுகிறது. நல்ல உணவை எடுத்து கொண்டோம் என்கிற மகிழ்ச்சி உங்களை அழகாக மாற்றும், ஆரோக்கியமான உணவும்... சரியான உடற்பயிற்சியும் உங்களை ஃபிட்னஸாக மாற்றும் என்பதை நயன்தாரா இந்த பதிவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.