குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை தான் உலகின் மிகப்பெரிய வீடாக உள்ளது. இது, பரோடாவின் கெய்க்வாட்ஸுக்கு சொந்தமானது. இங்கிலாந்தின் புகழ்வாய்ந்த பக்கிங்ஹாம் அரண்மனையை விட நான்கு மடங்கு அதிக பரப்பளவில் அமைந்துள்ளது.
முன்னொரு காலத்தில் கெய்க்வாட்கள் பரோடாவின் ஆட்சியாளர்களாக இருந்தனர், மேலும் உள்ளூர் சமூக மக்களும் அவர்களை உயர்குலமாக கருதி மரியாதை செலுத்தினர்.
தற்போது சமர்ஜித்சிங் கெய்க்வாட் மற்றும் அவரது மனைவி ரதிகராஜே கெய்க்வாட் அந்த லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் வசித்து வருகின்றனர்.
வாழ்ந்தா இந்த மாதிரி ஒரு வீட்டில் வாழணும்! - Top 5 பங்களா இதுதான்!
லக்ஷ்மி விலாஸ் அரண்மனை 3,04,92,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையின் 828,821 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீடு 48,780 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.