ஹனிமூனுக்கு சென்ற ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்.. ஒருநாள் ரிசார்ட் வாடகை எவ்வளவு? ஷாக் ஆயிடுவீங்க!

First Published | Aug 7, 2024, 8:47 AM IST

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் ரிசார்ட் ஒன்றை தங்களது ஹனிமூனுக்காக தேர்வு செய்துள்ளார்கள். இதன் விலை அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

Anant Radhika Honeymoon Cost

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ஜூலை 12 அன்று, ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்து கொண்டார். இது உலக அளவில் இன்றுவரை உலகின் மிக விலையுயர்ந்த திருமணம் என்று அழைக்கப்படுகிறது. அவர்களின் ஆடம்பரமான திருமண கொண்டாட்டங்கள் மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர்கள் கலந்து கொண்டனர்.

Anant Radhika Honeymoon

இதை தொடர்ந்து, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இப்போது கோஸ்டாரிகாவில் தங்கள் தேனிலவு அதாவது ஹனிமூனுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகஸ்ட் 1 அன்று கோஸ்டாரிகாவை அடைந்தனர்  என்றும், அங்குள்ள காசா லாஸ் ஓலாஸில் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த ரிசார்ட்டில் தங்குவதற்கு ஒரு இரவுக்கான விலை $30,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ. 25 லட்சத்திற்கும் அதிகமாகும்.

Tap to resize

Costa Rica

காசா லாஸ் ஓலாஸ் பிரீட்டா விரிகுடாவின் காட்சிகளைக் கொண்ட ஒரு ஆடம்பரமான ரிசார்ட் ஆகும். இது காஸ்மோபாலிட்டன் நேர்த்தியை காட்டுவதோடு, திறந்தவெளிகள், பனை மரங்கள் என இயற்கையை பிரமாண்டமாக வெளிப்படுத்தும் ரிசார்ட்டாக உள்ளது. 100-அடியிலான நீச்சல் குளம், திறந்த வெளி என பணக்காரர்களின் சிறந்த அதிக பட்ஜெட் பொழுதுபோக்கு இடமாக இது உள்ளது.

Anant Radhika Honeymoon Resort

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் இவான்கா டிரம்ப், மார்க் ஜுக்கர்பெர்க், பில் கேட்ஸ், ஜஸ்டின் பீபர் மற்றும் கர்தாஷியன் போன்ற உலக பிரபலங்கள் கலந்து கொண்டு பேசுபொருளாக்கினர். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கான 5000 கோடி ரூபாய் செலவிட்டதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதிகளவு சைவ உணவை ஆர்டர் செய்யும் இந்திய நகரம்.. அயோத்தி, ஹரித்வார் அல்ல.. எது தெரியுமா?

Latest Videos

click me!