சென்னையில் இருந்து ஒரு நாளில் எங்கெல்லாம் ட்ரிப் போகலாம் தெரியுமா.. இது தெரியாம போச்சே!

First Published | Aug 5, 2024, 2:43 PM IST

சென்னையை சுற்றி ஒருநாளில் சுற்றிப் பார்க்கக்கூடிய இடங்கள்  குறிப்பாக யாருக்கும் அவ்வளவாக தெரியாத சிறப்புமிக்கஇடங்கள் என்னென்ன, அவற்றின் சிறப்புகள் என்னென்ன என்பதையும்  பார்க்கலாம்.

Best places to visit in Chennai

பழங்கால பாறைக் கோயில்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடலோர காட்சிகளுக்கு பெயர் பெற்ற மகாபலிபுரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். கடற்கரைக் கோயில், அர்ஜுனனின் தவம் மற்றும் பஞ்ச ரதங்களை நீங்கள் குடும்பத்தோடு கண்டு மகிழலாம். சென்னையிலிருந்து 52 கி.மீ தூரம் தான்.

Chennai best places to visit

புலிகாட் ஏரி பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்றதாகும். புலிகாட் பறவைகள் சரணாலயம், டச்சு கல்லறை ஆகியவற்றை நீங்கள் பார்வையிடலாம் மற்றும் புலிகாட் தீவுக்கு படகு சவாரி செய்து மகிழலாம். தூரத்தை பொறுத்தவரை சென்னையில் இருந்து 104 கி.மீ ஆகும்.

Tap to resize

Best places to visit in chennai with friends

சென்னையில் இருந்து 72 கி.மீ தூரத்தில் இருக்கும் காஞ்சிபுரம் கோயில்கள் மற்றும் பட்டுப் புடவைகளுக்குப் புகழ்பெற்ற ஊராகும். ஏகாம்பரேஸ்வரர் கோயில், கைலாசநாதர் கோயிலுக்குச் சென்று, அருமையான பட்டுப் புடவைகளை வாங்கலாம்.

Best places to visit in chennai for couples

நாகலாபுரம் சென்னையில் இருந்து 74 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.  இயற்கை எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல சாய்ஸ் ஆக இருக்கும். மலையேற்றம் மற்றும் அருவிகளை பார்ப்பதற்கு நல்ல இடமாகும்.

Best places to visit in chennai with family

சென்னையில் இருந்து 130 கிமீ தூரத்தில் உள்ள திருப்பதி இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் யாத்திரைத் தலங்களில் ஒன்றாகும். திருமலை வெங்கடேஸ்வரா கோவில், அலமேலு மங்கை கோவில் என ஆன்மீக விசிட் அடிக்கலாம்.

Best place to visit in chennai with kids

சென்னையில் இருந்து சுமார் 85 கிமீ தூரத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவின் பழமையான பறவைகள் சரணாலயங்களில் ஒன்று ஆகும். பல்வேறு பறவை இனங்களை பார்ப்பது, இயற்கை சூழலை அமைதியாக ரசிப்பது என உங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.

அதிகளவு சைவ உணவை ஆர்டர் செய்யும் இந்திய நகரம்.. அயோத்தி, ஹரித்வார் அல்ல.. எது தெரியுமா?

Latest Videos

click me!