இன்னுமா அம்பானி வீட்டு திருமணம் முடியல.. இந்திய உடையில் ஹாட் போஸ்.. கிம் கர்தாஷியனின் நியூ போட்டோஸ்..

First Published | Aug 2, 2024, 4:02 PM IST

அம்பானி வீட்டு திருமணத்தில் சர்வதேச பிரபலம் கிம் கர்தாஷியன் கலந்து கொண்ட நிலையில், தற்போது இந்திய உடையில் இருக்கும் புதிய போட்டோக்களை அவர் பதிவிட்டுள்ளார்.

Kim Kardashian

சமீபத்தில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் பிரம்மாண்ட திருமணம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. தனது இளைய மகனின் திருமணத்திற்கு அம்பானி ரூ.5000 கோடி செலவு செய்ததாக கூறப்படுகிறது.

Kim Kardashian

இந்த திருமணத்தில் கிம் கர்தாஷியன் மற்றும் க்ளோ கர்தாஷியன் ஆகிய சர்வதேச பிரபலங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். 

Tap to resize

Kim Kardashian

மாடலும் நடிகையுமான கிம் கர்தாஷியன் அம்பானி வீட்டு திருமண இந்திய உடைகள் மற்றும் நகைகளை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Kim Kardashian

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாக்களில் பங்கேற்பதற்காக அவர் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்தார். அவருடன் அவரது சகோதரி க்ளோ கர்தாஷியனும் வந்திருந்தார். 

Kim Kardashian

இந்த நிலையில் கிம் கர்தாஷியன் அம்பானி வீட்டு திருமண விழாவில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். கிரே கலர் கவுனில் வைர நெக்சஸ் அணிந்த புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார். அதே போல் ரெட் கலர் லெஹங்காவில் எடுத்த போட்டோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். 

மேலும் தனது சகோதரி க்ளோ கர்தாஷியனுடன் காரில் எடுத்துக் கொண்ட செல்ஃபியையும் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்களை பதிவிட்டு  "இந்தியா இழந்த கோப்புகள்" என்று தலைப்பிட்டுள்ளார்.

Kim Kardashian

கிம் கர்தாஷியன் ஒரு ரியாலிட்டி டிவி நட்சத்திரம் என்பதை தாண்டி  ஃபேஷன் ஐகானாகவும் வலம் வருகிறார். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.14,000 கோடி என்று கூறப்படுகிறது.

Kim Kardashian

நடிப்பு, மாடலிங் மற்றும் வணிக முயற்சிகள் மூலம் அவருக்கு ஆண்டு வருமானம் மொத்தம் ரூ 900 கோடி என்று கருதப்படுகிறது. பிரம்மாண்ட வீடு, விலை உயர்ந்த சொகுசு கார்கள், பிரைவேட் ஜெட், ஆடம்பர ஹேண்ட் பேக் என ராணி போல் வாழ்ந்து வருகிறார் கிம் கர்தாஷியன்.

Latest Videos

click me!