ஸ்ட்ரீட் ஃபுட் ரசிகரான முகேஷ் அம்பானி! குடும்பத்துடன் சாப்பிடும் சாலையோர உணவு என்னென்ன தெரியுமா?

Published : Jul 31, 2024, 11:19 PM IST

இந்தியாவின் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீதா அம்பானி இருவரும் மும்பையில் உள்ள ஒரு சாதாரண உணவகத்தில் ரொம்ப காலமாக விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.

PREV
14
ஸ்ட்ரீட் ஃபுட் ரசிகரான முகேஷ் அம்பானி! குடும்பத்துடன் சாப்பிடும் சாலையோர உணவு என்னென்ன தெரியுமா?
Nita Ambani reveals Mukesh Ambani's favourite street food and it's not what you think

இந்தியாவின் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீதா அம்பானி இருவரும் எளிமையான சாலையோர உணவுகளின் ரசிகர்கள் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். மும்பையில் உள்ள ஒரு சாதாரண உணவகத்தில் ரொம்ப காலமாக விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.

24
Nita Ambani sat in the hotel and ate tomato chat

மும்பையில் உள்ள ஸ்வாதி ஸ்நாக்ஸ் என்ற கடை குஜராத்தி உணவுக்காக புகழ்பெற்ற ஃபாஸ்ட் புட் உணவகம். இந்தக் கடை அம்பானி குடும்பத்திற்கே பிடித்த உணவகமாக உள்ளது. மூன்று தலைமுறையாக அம்பானி குடும்பத்தினர் இந்த உணவகத்தில் சாப்பிடுகிறார்கள்.

எழுத்தாளரான ஸ்வாதி ஸ்நாக்ஸ் உரிமையாளர் ஆஷா ஜாவேரி தனது சுயசரிதையில் அம்பானி குடும்பத்தைப் பற்றி எழுதியுள்ளார். “மூன்று தலைமுறையாக ஒவ்வொரு வாரமும் அம்பானி குடும்பத்தினர் ஸ்வாதி ஸ்நாக்ஸில் ஆர்டர் செய்யாமல் இருக்க மாட்டார்கள்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

34
Ambani street food

ஜாவேரியின் தாயார் மீனாட்சி 1963ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்வாதி ஸ்நாக்ஸ், இப்போது நான்கு கிளைகளுடன் இயங்குகிறது. மும்பையில் இரண்டு கிளைகளும் அகமதாபாத்தில் இரண்டு கிளைகளும் உள்ளன. இவர்களின் மெனுவில் செவ் பூரி, பானி பூரி மற்றும் தாஹி படாடா பூரி ஆகியவை முகேஷ் அம்பானியின் விருப்பமான உணவு வகைகள்.

முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் ஜோடியாக அடிக்கடி இந்த உணவகத்திற்கு வருவார்கள் என்று ஜாவேரி நினைவுகூர்கிறார். "அம்பானி தம்பதி அடிக்கடி இங்கே வருவார்கள். வரிசையில் நின்று உள்ளே செல்வார்கள். ஆனால் இப்போது பெரும்பாலும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்கிறார்கள்" என்று சொல்கிறார்.

44
Ambani street food

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும், கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மனைவியுமான நீதா அம்பானி சமீபத்தில் வாரணாசியில் உள்ள பிரபல சாட் கடைக்கு சென்றிருந்தார். வாரணாசியில் தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்யச் சென்ற நீதா அம்பானி அங்கிருக்கும் சாலையோர உணவகத்தில் சாப்பிட்டார்.

வாரணாசி சாட் கடையில் சாப்பிட்ட நீதா அம்பானி, தனது கணவர் முகேஷ் அம்பானி தெருவோர கடைகளில் கிடைக்கும் உணவுகளை ரசித்துச் சாப்பிடுவார் என்று கூறினார். அம்பானி குடும்பத்தினர் தெருத்தெருவாக சாலையோர உணவுகளை ருசி பார்ப்பது இந்திய உணவு வகைகள் மீது அவர்களுக்கு இருக்கும் பிரியத்தைப் பிரதிபலிக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories