பாமபு கடித்தால் செய்ய வேண்டியவை!
பாம்பு கடித்துவிட்டால் முடிந்தவரை பதற்றப்படாமல் இருக்க வேண்டும்
பாம்பு கடித்துவிட்டால், அவர் தான் அணிந்திருக்கும் இருக்கமான மோதிரம், கொலுசு போன்றவற்றை கழற்ற வேண்டும்
அருகிலிருப்பவர்களின் துணையுடன் விரைந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
கடித்த பாம்பை அடித்தோ, அல்லது புகைப்படம் எடுத்துச்சென்றால் சிகிச்சை அளிக்க மருத்துவருக்கு எளிமையாக இருக்கும்.
கை, கால் போன்ற இடங்களில் பாம்பு கடித்தால், அதை இதய மட்டத்திற்கு மேலே உயர்த்தக்கூடாது.
பாமபு கடித்தால் செய்யக்கூடாதவை!
பாம்பு கடித்துவிட்டால் அவசரஅவசரமாக ஓடக்கூடாது. ஓட்டத்தின் போது ரத்த அழுத்தம் அதிகமாவதால் விஷம் எளிதில் பரவ வாய்ப்புள்ளது.
சினிமாக்களில் காண்பிப்பது போல் பாம்பு கடித்த இடத்தை கிரி விடுவதோ, வாய் வைத்து ரத்தத்தை உறிஞ்சு எடுப்பதோ கூடாது.
பாம்பு கடித்த இடத்திற்கு மேலும் கீழும் இறுக்கமாக கட்டுவது கூடவே கூடாது.
பாம்பு கடித்த நேரத்தில், தண்ணீர், சாப்பாடு போன்றவைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
பாம்புக்கு கடிக்கான மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனையில் எளிதாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக நான்கு வகையான பாம்புகளில்தான் அதிக விஷத்தன்மை காணப்படுகிறது. கட்டுவீரியன், நாகபாம்பு போன்ற முக்கோணத் தன்மை கொண்ட பாம்புகள் என்றாலே விஷத்தன்மை கண்டிப்பாக கொண்டிருக்கும்.