வாழ்ந்தா இந்த மாதிரி ஒரு வீட்டில் வாழணும்! - Top 5 பங்களா இதுதான்!
2024-ல் இந்தியாவில் உள்ள டாப்-5 விலை உயர்ந்த வீடுகளைப் பற்றிப் பார்த்தால் அன்றும் இன்றும் என்றுமாக இருக்கும் ஆடம்பர பங்களா இதுதான். அதுதான் முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா தான். சிம்பிளா சொன்னா சொர்கமே இதுதான். மற்ற சொகுசு மற்றும் விலை உயர்ந்த பங்களா என்னென்ன இருக்கு என இங்கே பார்க்கலாம்.

ஆண்டிலியா
முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா வீடுதான் இந்தியா மட்டுமின்றி உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த வீடாக உள்ளது. ஆண்டிலியா, 2010 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த பங்களாவில் 27 மாடிகள், 168 கார் கேரேஜ், பால்ரூம், ஒன்பது அதிவேக லிஃப்ட், 50 இருக்கைகள் கொண்ட திரையரங்கு, மாடித் தோட்டங்கள், நீச்சல் குளம், ஸ்பா, சுகாதார மையம், கோயில் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 12000 கோடி.
ஜேகே ஹவுஸ்
ரேமண்ட் குழுமத்தின் தலைவர் கௌதம் சிங்கானியாவுக்குச் சொந்தமான ஜேகே ஹவுஸ், இந்தியாவின் இரண்டாவது விலையுயர்ந்த பங்களா. இதன் மதிப்பு சுமார் ₹6000 கோடி. தெற்கு மும்பையில் அமைந்துள்ள இந்த 30-அடுக்கு குடியிருப்பு பல்வேறு நவீன வடிவமைப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது, இதில் இரண்டு நீச்சல் குளங்கள் மற்றும் ஐந்து மாடிகள் உயர்தர கார்களை நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளன.
அபோட்
அண்ணனுக்கு தம்பி சளைத்தவன் இல்லை என்பதை காட்டும் விதமாக, அனில் அம்பானியின் இல்லமான அபோட், இந்தியாவின் மூன்றாவது விலையுயர்ந்த வீடு. 16,000 சதுர அடியில், 70 மீட்டர் உயரம் கொண்ட ஹெலிபேடுடன் கட்டப்பட்டுள்ளது. மும்பையின் பாலி ஹில்லில் அமைந்துள்ள இந்த 17-அடுக்குக் கட்டிடம் முன்பு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆண்டிலியாவுக்குச் செல்வதற்கு முன்பு அவர்களது இல்லமாக இருந்தது குறிபிடத்தக்கது.
ஜாடியா ஹவுஸ்
நான்காவது இடத்தில் இருப்பது கே.எம்.பிர்லாவுக்கு சொந்தமான ஜாடியா வீடு, இந்தியாவின் விலை உயர்ந்த வீடுகளில் இதுவும் ஒன்று. ஒன்றாகும். 30,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ. 425 கோடி.
மன்னத்
பாலிவுட் பாஷா ஷாருக்கானின் வீடு, இந்தியாவின் ஐந்தாவது விலை உயர்ந்த வீடாக உள்ளது. மும்பையின் பாந்த்ராவில் உள்ள இந்த ஆறு மாடி கட்டிடத்தின் இப்போதைய மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய். இது 27000 சதுர அடிக்கு மேல் பரப்பளவைக் கொண்டுள்ளது. கடந்த 2016-ல் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ராஜீவ் பரேக்கால் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.