அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். குறிப்பாக, ஆடி மாதத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலை காரணமாக, இந்த மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் இருமல் போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு வலி வகுக்கும். அதோடு இந்த காலகட்டத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குளிர்ச்சி தேவை என்பதால், இந்த நேரத்தில் கம்பு மற்றும் கேழ்வரகை பயன்படுத்தி கூழ் செய்து அருந்தினோம். ஏழை எளியோர் பசியை ஆற்றும் அரு மருந்து கூழ் ஆகும். அதோடு வேப்பிலை, மஞ்சள் நீர், வைத்து அம்மனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. இதனால், ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க....Aadi Month 2022 Rasi Palan: ஆடி மாதத்தை ஒட்டி நிகழ்ந்த சூரியன் பெயர்ச்சி....கஜகேசரி யோகம் பெறவுள்ள 4 ராசிகள்..