Aadi Velli Special 2022: ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் ஆகும். ஆடி மாதம் வந்தாலே எல்லோரின் வீட்டிலும், பூஜை, பரிகாரங்கள் செய்து அம்மனை வழிபடுவது வழக்கம். அதிலும், குறிப்பாக இந்த மாதத்தில், முப்பது நாளும் அம்மன் கோவிலில் விசேஷ பூஜைகள், கூழ் ஊற்றும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
ஆடி மாதம் வரும் செவ்வாயும் வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த அருமையான நாட்கள் ஆகும். அதன்படி இந்த வருடம் ஆடி மாதம் ஜூலை 17 பிறக்கிறது. ஆடி மாதத்தில் மொத்தம் நான்கு வெள்ளி வரும். முதல் ஆடி வெள்ளி வருகிற ஜூலை 22ல் பிறக்கிறது. இதையடுத்து, இரண்டாவது ஆடி வெள்ளி ஜூலை 29ல் வருகிறது. மூன்றாவது ஆகஸ்ட் 5 மற்றும் ஆகஸ்ட் 15 கடைசி வெள்ளிக்கிழமை, உள்ளிட்ட ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமை ஆகும். இந்த நாட்களின், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். ஆடி மாதம் முழுவதும், அம்மன் மாதம் என்பதால், சிவனின் சக்தியைவிட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும்.
ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். வீட்டில் அம்மன் படத்துக்கு சிறப்பு பூஜை செய்யுங்கள். அம்மன் மந்திரம் போற்றி சொல்லுங்கள். ஓம் சக்தி சொல்லுங்கள்.
ஆடி மாதம் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெண்கள் அன்னதானம் செய்வது மிகவும் நல்லது. தான தருமங்கள் செய்ய வேண்டும்
33
Aadi Velli Special 2022:
சுமங்கலி பூஜை:
பூஜையில் சுமங்களை அழைத்து அவர்களுக்கு, பூ, பழம், தேங்காய், மஞ்சள் கயிறு, ஜாக்கெட் துணி போன்றவற்றை வைத்து அனுப்புங்கள். அப்படி செய்தால், உங்கள் குலம் தழைக்கும். மாங்கல்ய பலம் பெருகும். திருமண தடை நீங்கும். நீங்கள் நீண்ட காலம் சுமங்கலியாய் நீடோடி வாழலாம். உங்கள் வாழ்வில் சுபிட்சம் உங்கள் இல்லம் தேடி வரும். நீங்கள் நினைத்த காரியம் நடைபெறும் என்பது நம்முடைய முன்னோர்களின் ஐதீகம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.