Calcium Bones: பரோட்டா பிரியரா நீங்கள்..? கண்டிப்பாக இந்த செய்தி உங்களுக்குத்தான்..மருத்துவர்கள் எச்சரிக்கை..!

Published : Sep 08, 2022, 11:54 AM ISTUpdated : Sep 08, 2022, 11:59 AM IST

Calcium Bones: பரோட்டா என்பது அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடித்தமான உணவு என்றாலும், இதனை சாப்பிடுவது பல்வேறு உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளை தருகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

PREV
14
Calcium Bones: பரோட்டா பிரியரா நீங்கள்..? கண்டிப்பாக இந்த செய்தி உங்களுக்குத்தான்..மருத்துவர்கள் எச்சரிக்கை..!
Calcium Bones:

பரோட்டா என்னும் மைதா மாவினால் தயாரிக்கப்படும் ரொட்டி வகை வாய்க்கு மிகவும் சுவையானதாக இருந்தாலும், அவர் உடல் நலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கிறது. மைதா நிறைந்த பரோட்டா சாப்பிடும் போது ஒருவருக்கு, எலும்புகள் வலுவிழந்தால் பிரச்சனை தோன்றும். மைதா கொண்டு, பூரி, சமோசா, பீட்ஸா, பர்கர், மோமோஸ், சில வகை பிஸ்கட் போன்றவற்றை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதனை உட்கொள்ளும் போது எளிதில், எலும்பு மெலிதல் நோய், மூட்டு வலிகள், எலும்பு முறிவு போன்ற பல உடல் நல பிரச்சனைகள் நம்மைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்குகின்றன. 

 மேலும் படிக்க...சமையலறையில் அடிக்கடி எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லிகள் உலா வருவதை தடுக்க..ரொம்பவே உபயோகமாக 5 கிச்சன் டிப்ஸ்..

24
Calcium Bones:

மைதா மாவிலிருந்து தயாரிக்கும் போது, மாவின் அனைத்து புரதங்களும், நார் சத்துக்களும் அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாக இது அமிலமாக செயல்படுகிறது. இது எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி இழுப்பதனால், இது எலும்புகளை பலவீனப்படுத்துகிறது. எனவே, எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் D நிறைந்த உணவுகளை சேர்ப்பது மிகவும் அவசியம். எனவே, எலும்புகளை வலுவிழக்க செய்யும் பரோட்டா போன்ற உணவுகளை தவிர்ப்பது, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

 மேலும் படிக்க...சமையலறையில் அடிக்கடி எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லிகள் உலா வருவதை தடுக்க..ரொம்பவே உபயோகமாக 5 கிச்சன் டிப்ஸ்..

34
Calcium Bones:

அதிக அளவில் மைதா உடலுக்கு கேடு விளைவிக்கும்

மைதா சாப்பிடும் போது எளிதில், குடலில் ஒட்டிக் கொள்கிறது. இதன் காரணமாக மலச்சிக்கல் பிரச்சினையும் ஏற்படக்கூடும். மேலும் இது அஜீரணத்திற்கும் காரணமாக அமைந்து விடும். மேலும், இரத்தத்தில் சர்க்கரை அளவை மிகவும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக கீல்வாதம் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து உருவாகிறது.

மைதாவில் அதிக அளவு மாவு சத்து உள்ளது, இதன் காரணமாக உடல் பருமன் அதிகரிக்கும். எனவே, நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், மைதாவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

44
Calcium Bones:

பரோட்டா தவிர எலும்புகளுக்கு பலவீனம் தரும் உணவுகள்:

அதிக இனிப்பு சாப்பிடுவது, ​​​​எலும்புகளில் இருந்து கால்ஷியம் உறிஞ்சப்பட்டு அவை, பலவீனமடைகின்றன.

காஃபின் உட்கொள்வது பெண்களின் எலும்பு அடர்த்தியையும் குறைக்கும். காஃபின் எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி பலவீனமடையச் செய்கிறது.

அதிகமாக சோடா குடித்தால், அது உங்கள் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். இது பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு அபாயத்தையும் அதிகரிக்கிறது.  

 மேலும் படிக்க...சமையலறையில் அடிக்கடி எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லிகள் உலா வருவதை தடுக்க..ரொம்பவே உபயோகமாக 5 கிச்சன் டிப்ஸ்..

Read more Photos on
click me!

Recommended Stories