Harm Your Brain : மூளையைக் மெதுவாகப் பாதிக்கும் 8 அன்றாடப் பழக்கங்கள்: நரம்பியல் நிபுணரின் முக்கிய எச்சரிக்கை!

Published : Jul 27, 2026, 08:30 PM IST

நாம் செய்யும் சில சாதாரண பழக்கங்கள் மூளையின் ஆரோக்கியத்தையும் நினைவாற்றலையும் பாதிக்கும். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சுட்டிக்காட்டும், மூளையை பாதிக்கும் 8 தவறான பழக்கங்கள் மற்றும் அவற்றை தவிர்க்கும் வழிகளைப் பற்றி இங்கு காண்போம்!

PREV
18
போதிய தூக்கமின்மை :

இரவில் 6 முதல் 8 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது மூளையின் நினைவாற்றலை நேரடியாகப் பாதிக்கும். நாம் தூங்கும்போதுதான் மூளை தனது கழிவுகளை வெளியேற்றி, அன்றாட நினைவுகளை ஒழுங்குபடுத்துகிறது. தூக்கம் குறையும் போது மூளை சோர்வடைவதோடு, நினைவாற்றல் இழப்பு மற்றும் ஸ்ட்ரோக் (Brain Stroke) ஆபத்தும் அதிகரிக்கிறது.

28
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது :

தொடர்ந்து 6 முதல் 8 மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. இது புதிய நினைவுகளை உருவாக்கும் மூளையின் பகுதியான 'மீடியல் டெம்போரல் லோப்' (Medial Temporal Lobe) சுருங்குவதற்குக் காரணமாகிறது.

38
இரவில் அதிக நேரம் திரை பார்ப்பது :

இரவில் தூங்குவதற்கு முன் மொபைல், லேப்டாப் அல்லது டிவிகளைப் பார்ப்பதால், அதிலிருந்து வரும் நீல வெளிச்சம் (Blue Light) மெலடோனின் (Melatonin) என்ற தூக்க ஹார்மோன் உற்பத்தியைத் தடுக்கிறது. இதனால் ஆழ்ந்த தூக்கம் பாதிக்கப்பட்டு மூளை ஓய்வின்றித் தவிக்கிறது.

48
நாள்பட்ட மன அழுத்தம் :

தொடர்ச்சியான கவலை மற்றும் மன அழுத்தம் உடலில் 'கார்டிசோல்' (Cortisol) என்ற ஹார்மோனை அதிகளவில் சுரக்கச் செய்கிறது. இது மூளையின் கற்றல் மற்றும் நினைவாற்றலுக்குக் காரணமான செல்களுக்குச் சேதத்தை ஏற்படுத்துகிறது.

58
சத்து இல்லாத உணவு மற்றும் ஜங்க் ஃபுட் :

அதிக சர்க்கரை, கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை (Ultra-processed foods) உண்பது மூளையில் வீக்கத்தை (Inflammation) உண்டாக்கும். ஆரோக்கியமான காய்கறிகள், பழங்கள், கொட்டைகள் (Nuts) மற்றும் தானியங்களை உணவில் சேர்ப்பது மூளையின் இளமையைத் தக்கவைக்கும்.

68
தனிமை மற்றும் சமூகத் தொடர்பு இல்லாமை :

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசிப் பழகாமல் தனிமையில் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். சமூகத் தொடர்பு குறைவாக உள்ளவர்களுக்கு மூளையின் 'சாம்பல் நிறப் பகுதி' (Gray Matter) விரைவாகச் சுருங்கி, 'அல்சைமர்' (Alzheimer's) போன்ற நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது.

78
அதிக சத்தத்தில் ஹெட்போன் பயன்படுத்துவது :

ஹெட்போன்களில் அதிக சத்தத்துடன் தொடர்ந்து பாட்டு கேட்பது காது கேட்கும் திறனைப் பாதிப்பதுடன், மூளையின் தகவல் செயலாக்கத் திறனையும் (Information Processing) குறைக்கிறது. சத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது மூளைக்கும் நல்லது.

88
மூளைக்கு வேலையும் உடலுக்குப் பயிற்சியும் தராமை :

உடற்பயிற்சி செய்யாததும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளாமல் மூளையை ஒரே மாதிரியாக வைத்திருப்பதும் மூளையின் சுறுசுறுப்பைக் குறைக்கும். தினமும் சிறிது நடைபயிற்சி செய்வதும், புதிர் போட்டிகள் அல்லது புதிய திறன்களைக் கற்பதும் மூளை செல்களைப் புத்துணர்ச்சியுடன் வைக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories